'உடலை பாக்க முடியாதோன்னு நினைச்சோம்'...'சிங்கப்பூரில் இருந்து வந்த என்ஜினியர் உடல்'... கதறி துடித்த சொந்தங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சிங்கப்பூரில் உயிரிழந்த என்ஜினியரின் உடல் 13 நாட்களுக்கு பிறகு சொந்த ஊரான பெரம்பலூருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செந்தில் குமார். 39 வயதான இவர் சிங்கப்பூரில் கப்பல் என்ஜினியராக பணியாற்றி வந்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் வீட்டிற்கு வந்த அவர், மீண்டும் சிங்கப்பூருக்கு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செந்தில் குமாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு,  பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உடலை சிங்கப்பூரில் இருந்து கொண்டு வருவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து பெரம்பலூர் தொகுதியின் எம்.பி பாரிவேந்தரிடம் இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மத்திய அரசிடம் பேசிய பாரிவேந்தர், செந்தில் குமாரின் உடலை பெரம்பலூருக்கு கொண்டு வர முயற்சி செய்தார். அவரின் முயற்சியின் பலனாக சிங்கப்பூரில் இருந்து செந்தில் குமாரின் உடல், பெங்களூருக்கு நேற்று இரவு 7.30 மணிக்கு விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்ட உடல், நேற்றிரவு பெரம்பலூர் வந்து சேர்ந்தது.

வீட்டிற்கு உடல் வந்ததும், செந்தில் குமாரின் உறவினர்கள் கதறி அழுதார்கள். கடைசியாக உடலை பார்க்க முடியாதோ என பரிதவித்த உறவினர்கள், 13 நாட்கள் கழித்து உடல் வந்தால், உடலை கொண்டு வர உதவிய எம்.பி பாரிவேந்தருக்கு உறவினர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்