இப்போ முட்டை 'இலவசமா' குடுக்குறோம்... நெக்ஸ்ட் 'சிக்கன்' ப்ரீயா தருவோம்... அசத்தும் மாவட்டம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கில் இருக்கும் மக்களுக்கு இலவசமாக முட்டை வழங்கும் திட்டம் நேற்று முதல் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கப்பட்டு இருக்கிறது.

இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் வீட்டுக்கு காய்கறிகள், மளிகை சாமான்களை சப்ளை செய்திடும் திட்டத்தினை பல்வேறு மாநில அரசுகளும் அமல்படுத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பையினை வீட்டுக்கு வீடு அதிகாரிகள் குறைந்த விலைக்கு வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 100 ரூபாய்க்கு காய்கறி பை மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அத்துடன் சேர்த்து இன்று முதல் 6 முட்டைகளையும் இலவசமாக வழங்க ஆரம்பித்து இருக்கின்றனர். மேலும் வரும் நாட்களில் சிக்கனை இலவசமாக அளிக்கவும் திட்டமிட்டு இருப்பதாக நாமக்கல் நகராட்சி தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து நாமக்கல் நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாட்சா கூறுகையில், ''நாமக்கல்லில் உள்ள 39 வார்டுகளில் நகராட்சி சார்பில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வசதிக்கு ஏற்ப காய்கறிகள் பைகளில் போட்டு வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகிறோம். இந்த நிலையில் பணம் கொடுத்து காய்கறி வாங்குபவர்களுக்கு இன்று முதல் 6 முட்டைகள் இலவசமாக வழங்க தொடங்கி உள்ளோம். இதனை தொடர்ந்து கோழிக்கறியை இலவசமாக வழங்க இருக்கிறோம்,'' என தெரிவித்து இருக்கிறார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்