“பள்ளி, கல்லூரி மாணவர்களுள் குறிப்பிட்டோருக்கு வகுப்புகள்.. திரையரங்குகளில் 100% அனுமதி!.. ஆனால் இதுக்கு 50% தான்”! - தமிழக அரசின் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு.. முக்கிய அம்சங்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப். 8-ஆம் தேதி முதல் 9, 11ஆம் வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என முக்கியமாக இதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 9ஆம் வகுப்புக்கும், 11ஆம் வகுப்புக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவிர அனைத்து கல்லூரிகள் / பல்கலைக் கழகங்களில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான அனைத்து வகுப்புகளும் பிப்.8 முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10.00 மணி முடிய செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ள பெட்ரோல் பங்க்குகள், நேரக் கட்டுப்பாடின்றி இனிமேல் இயங்க அனுமதிக்கப்படுகின்றன.
நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நீச்சல் குளங்கள் செயல்படவும், 100 சதவிகித இருக்கைகளை பயன்படுத்தி அனைத்து திரையரங்குகளும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் செயல்படவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் கண்காட்சிக் கூடங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படவும் அறிவுறுத்தப்பட்டதுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் விளையாட்டு நிகழ்ச்சிகளில் (கிரிக்கெட் உட்பட), அதிகபட்சம் 50% இருக்கைகளில் மட்டும் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மதுரையில் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதாவுக்கு பிரமாண்ட கோயில்.. திறந்து வைத்த முதல்வர் பழனிசாமி..!
- கடல்லையே இல்லையாம்...! 'எங்க மாவட்டத்துல கொரோனா பூஜ்ஜியம்...' - கெத்து காட்டும் தமிழக மாவட்டம்...!
- 'தமிழகத்தின்' இன்றைய (29-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- ஆணின் விந்து வீரியத்தை அழிக்குமா கொரோனா வைரஸ்?!.. புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!
- 'தமிழகத்தின்' இன்றைய (28-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!
- 'கொரோனா தடுப்பூசியை பெறுவதற்காக'.. ஹோட்டல் ஊழியர்களாக மாறி ‘கோடீஸ்வர கணவரும் நடிகையும்’.. செய்த மோசடி அம்பலம்! அடுத்த நடந்த ‘அதிரவைக்கும் சம்பவம்!’
- 'ஆசனவாய் வழியாக கொரோனா டெஸ்ட்'... 'என்னங்க சொல்றீங்க, அதிர்ச்சியான நெட்டிசன்கள்'... இப்படி தான் டெஸ்டிங் இருக்கும்!
- சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 'நினைவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ள'.. 'அவரது ஆதர்ச வாசகம் இதுதான்!'
- 'ஒரு மணி நேரத்திற்கு இத்தனை கோடியா'??... 'லாக்டவுன் நேரத்திலும் மனுஷன் வேற லெவல் பண்ணிட்டாரு யா'... ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட தகவல்!
- 'தமிழகத்தின்' இன்றைய (26-01-2021) 'கொரோனா' நிலவரம்...! 'சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில்...' - முழு 'விவரம்' உள்ளே...!