நோய் 'எதிர்ப்பு' சக்தி ரொம்பவே அதிகம்... போட்டிபோட்டு 'வாங்கி' செல்லும் வெளிநாட்டினர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மலைகளின் அரசி என புகழப்படும் கொடைக்கானலில் அவக்கோடா பழங்கள் அதிகளவில் காய்த்து குலுங்குகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி இந்த பழங்களில் அதிகம் இருப்பதால் வெளிநாட்டினர் இப்பழங்களை அதிகளவில் வாங்கி உண்கின்றனராம்.
இந்த பழங்களில் பல்வேறு வைட்டமின் சத்துகள் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் கால்சியமும் அதிக அளவில் உள்ளது. மேலும் எந்த பழத்திலும் இல்லாத அளவுக்கு இதில் நல்ல கொழுப்பு சத்து உள்ளது. இந்த பழங்களை வெளிநாட்டினர் உள்ளவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர். அவர்கள் தினசரி ஒரு வேளை உணவாகவே இந்த பழங்களை சாப்பிடுகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிக அளவில் கிடைக்கிறது என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் உலகளவில் கொரோனா வேகமாக பரவிவருவதால் வெளிநாடுகளில் வசிப்போர் இந்த பழங்களை அதிகளவில் வாங்கி சாப்பிட ஆரம்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் கொடைக்கானல் பகுதியில் தற்போது சீசன் தொடங்கி இருந்தாலும் ஊரடங்கு காரணமாக அவற்றை ஏற்றுமதி மற்றும் விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதனால் மத்திய, மாநில அரசுகள் இந்த பழங்களின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், இந்த பழங்களை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ரூ.20 லட்சம் கோடி பொருளாதார சலுகைகள்... 'சிறு குறு தொழில்களுக்கு பிணையின்றி கடனுதவி!'.. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
- 'கைநிறைய சம்பளம், அமெரிக்கால வேலைன்னு ஆசையா வந்தோம்'... 'பறிபோன வேலை'... 'இந்தியாவுக்கு வர முடியாமல் தவிப்பு'... அதிர்ச்சி பின்னணி!
- "என்ன விளையாடுறீங்களா!?.. இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது!".. 20 வருஷத்துல 5 கொள்ளை நோய்கள்!.. சீனாவை ரவுண்டு கட்டி வெளுக்கும் அமெரிக்கா!
- 'தடுப்பூசியை' கண்டறிவதற்கு எந்த 'உத்தரவாதமும்' இல்லை... 'இங்கிலாந்து பிரதமரின் நம்பிக்கை இழந்த பேச்சு...'
- 'கொரோனாவைக் கட்டுப்படுத்த...' 'இஸ்ரேல் கண்டுபிடித்த வேற லெவல் திட்டம்...' 'கடும்' எதிர்ப்புக்கிடையே தொடரும் 'சோதனைகள்...'
- 'உலக சுகாதார நிறுவனத்தை மிரட்டிய சீனா...' 'விசாரணையில்' வெளியான 'அதிர்ச்சித் தகவல்...' 'அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ அறிக்கை...'
- 'எலி மட்டும் இல்ல'... 'ஊழியர்களுக்கு காத்திருந்த பெரிய அதிர்ச்சி'... 'பாழான பிரபல ஷாப்பிங் மால்'... வைரலாகும் வீடியோ!
- 'கொரோனாவால் அதிகம் பாதித்த 2வது நாடு!'.. 'அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக 10 நாளில் கிடுகிடுவென உயர்ந்த எண்ணிக்கை!'
- ‘கொரோனாவை நெனச்சு கொஞ்சம் கூட பயமில்லை’.. அடுத்த கோயம்பேடு மார்க்கெட்டா மாற ரெடியாகும் காய்கறி சந்தை..!
- "ஆண்கள் 30 வயதுக்குள்ள திருமணம் பண்ணனும்"!.. "பெண்கள் 35 வயதுக்குள்ள 2 குழந்தைகளுக்கு தாயாகணும்!".. 'புதிய' திட்டம் தீட்டிய 'நாடு'!.. 'ஆச்சர்யப்பட' வைக்கும் 'காரணம்'!