கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்ற தகவல் பரவி வருகிறது. குறிப்பாக சென்னையில் ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படும் என தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மீண்டும் முழு ஊரடங்கு தீவிரப்படுத்தப்படுமா என்று விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த நிலையில் டெல்சா பாசனத்திற்காக மேட்டூர் அணையை முதல்வர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் பேசிய முதல்வர் பழனிசாமி தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்ற கேள்விக்கு விளக்கமளித்தார். அதில்,‘தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு என்ற தகவல் வதந்தி. தமிழக அரசு அப்படி எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. வதந்தி பரப்பியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என முதல்வர் தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
“என்ன பண்றேனு பாருங்க!”.. போதை தலைக்கேறி, டிக்டாக்கிற்காக இளைஞர் செய்த வேலை... உயிரைப் பறித்த சோகம்!
தொடர்புடைய செய்திகள்
- 'முத்தம் கொடுத்து' அன்பை பரப்பிய 'முத்த பாபா...' 'கொரோனாவையும்' சேர்த்து பரப்பியதால் 'வந்த வினை...'
- 'முதல் முறையாக' கொரோனாவிற்கு 'அங்கீகரிக்கப்பட்ட மருந்து...' 'ரஷ்யாவில் அறிமுகம்...' '10 நாடுகள்' இந்த மருந்தை வாங்க 'விருப்பம்...'
- கொரோனா 'பரிசோதனை' செய்தால்... 'குடும்பத்துடன்' கட்டாயம் 14 நாட்கள் 'தனிமை'... முழுவிவரம் உள்ளே!
- 7ம் வகுப்பு வரை "ஆன்லைன்" கல்விக்கு "தடை"!.. அதிரடியாக அறிவித்த 'மாநில' அரசு!.. ஏன்?
- சென்னை டூ ஊட்டி... இ-பாஸ் இல்லாம 500 கி.மீ 'டிராவல்' செய்து... கொரோனாவுடன் 'ஊருக்குள்' நடமாடிய நபர்... தலை சுற்ற வைக்கும் டிராவல் ஹிஸ்டரி!
- மதுரையில் ஒரே நாளில் 19 பேருக்கு தொற்று!.. திருவண்ணாமலையிலும் அதிகரிக்கிறது!.. பிற மாவட்டங்களில் நிலவரம் என்ன?
- இன்று ஒரே நாளில் டாக்டர் உட்பட தமிழகத்தில் 23 பேர் கொரோனாவுக்கு பலி!.. முழு விவரம் உள்ளே
- 'கொரோனா இருக்கு ஆனா இல்ல...' 'வரும் ஆனா வராது...' 'ஏதோ ஒண்ணு...' '35 பேருக்கு' 'கதறக்கதற' ட்ரீட்மென்ட்... '3 நாள்' கழித்து காத்திருந்த 'ட்விஸ்ட்...'
- 'கழிவறையில் அழுகிய நிலையில் சடலம்...' 'கொரோனா பாதித்த 82 வயது பாட்டி...' எட்டு நாளுக்கு முன்ன ஆஸ்பத்திரியில இருந்து காணாம போயிருக்காங்க...!
- 'ஆமாம்', வைரசின் 'வீரியம் அதிகரித்துள்ளது...' 'பாதுகாப்புடன் இருந்து கொள்ளுங்கள்...' அமைச்சர் 'விஜயபாஸ்கர்' எச்சரிக்கை...