யோவ்.. கடனை கட்டிட்டு செத்து போ..' விவசாயியை தற்கொலைக்கு தூண்டும் படி பேசிய தனியார் நிறுவன பெண் ஊழியர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

விழுப்புரம் மாவட்டத்தின் ஏனாதிமங்கலத்தைச் சேர்ந்தவர் ரகோத்தமன். விவசாய வேலை செய்துவரும் இவர் அருகேயுள்ள இந்தியன் வங்கியில் 30,000 ரூபாய் கடன் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்கும்படி தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தரக்குறைவாக ரகோத்தமனை திட்டும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகிவருகிறது.

Advertising
>
Advertising

அத்துமீறிய வார்த்தைகள்

ரிலையன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிவதாக தன்னை போனில் அறிமுகப்படுத்திக்கொண்ட பெண், ரகோத்தமனிடம் அவர் வாங்கிய கடன் குறித்துக் கேட்டிருக்கிறார். அதற்குப் பதிலளித்த ரகோத்தமன், தான் அரசிடம் கடன் வாங்கியிருப்பதாகவும் அதுகுறித்து நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் எனக் கேட்க, கோபமடைந்த பெண் மரியாதைக்குறைவாக ரகோத்தமனை சாடியிருக்கிறார்.

நாளை முதல் தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள்.. வரப்போகுது புதிய அறிவிப்பு

 

தற்கொலைக்குத் தூண்டிய பெண்

பணத்தைக் கட்டிட்டு நீ கலெக்டர் கூட போ, என ஒருமையில் ரகோத்தமனைப் பேசிய பெண் ஊழியர் ஒரு கட்டத்தில் பணத்தை கட்டிட்டு போய் சாவு எனக் கடுமையாக திட்டியிருக்கிறார். இதனால் வயதான விவசாயியான ரகோத்தமன் மன ரீதியாக பதிப்படைந்துள்ளார்.

தமிழகத்தில் இதுபோன்று, வங்கிக்கடன் குறித்து போன் செய்யும் தனியார் நிறுவன அதிகாரிகள் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகிப்பதாக பொதுமக்கள் பலரும் குற்றம்சாட்டிவருகின்றனர்.

2000 பேருடன் கிளம்பிய கப்பலில் தீயாய் பரவும் கொரோனா - மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கொர்டேலியா க்ரூஸ் கப்பல்..!

 

FEMALE EMPLOYEE, ELDERLY FARMER, REPAY LOAN, பெண் ஊழியர்

மற்ற செய்திகள்