'தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு'... 'அறிவிக்கப்பட்ட விடுமுறை திடீரென நிறுத்திவைப்பு'... விபரங்கள் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பு தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76-லிருந்து 85 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றைத் தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகளுக்கு மார்ச் 16 முதல் வரும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று மாலை உத்தரவிட்டது. மேலும், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் 5 ஆம் வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. நிர்வாக காரணங்களுக்காக இந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்தபிறகு, மீண்டும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றோ, நாளையோ புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா முன்னெச்சரிக்கை: 'தமிழக' மாணவர்களின் 'விடுமுறை' குறித்து... புதிய அறிவிப்பை 'வெளியிட்ட' அரசு!
- யாருக்கும் 'கொரோனா' இல்ல... ஆனாலும் பள்ளி, கல்லூரிகளை 'காலவரம்பின்றி' இழுத்து மூடிய அரசு!
- 'குழந்தைகளுக்கு லீவு விடுங்க!'... மாணவர்களுக்காக களத்தில் குதித்த ஆசிரியர்கள்!... தமிழக முதல்வருக்கு 'ஆசிரியர் சங்கம்' கோரிக்கை!!... சென்னையில் பரபரப்பு!
- ‘கோயிலுக்கு போயிருந்த பெற்றோர்’.. ‘வீட்டில் தனியாக இருந்த மகன்’.. சென்னையில் நடந்த சோகம்..!
- 'வெளிய சொன்னா 'பரீட்சை மார்க்'ல கைவச்சுடுவேன்!'... சுற்றுலா அழைத்து சென்று... மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ஆசிரியர்!... பிடிப்பட்டது எப்படி?... பகீர் ரிப்போர்ட்!
- ‘நான் அத எடுக்கல சார்’!.. ‘அப்பா இல்லாத பையன்’.. 9ம் வகுப்பு மாணவன் எடுத்த முடிவு.. நெஞ்சை உருக்கும் சோகம்..!
- ‘தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களின்’... ‘மார்க் ஷீட்டில் இனி இவங்க பேரு இருக்கும்’... ‘கல்வித்துறையில் பல புதிய தகவல்கள் வெளியீடு’!
- ‘எனக்கு கண்ணீர் வந்திருச்சு’!.. பள்ளியில் மாணவிக்கு நடந்த ‘பாராட்டு விழா’.. ‘சல்யூட்’ போட வைத்த மாணவியின் செயல்..!
- ‘தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விட வேண்டும்...’ ‘கொரோனா வேகமாக பரவுது...’ விடுமுறை அளிப்பது குறித்து உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு...!
- ‘மச்சா ஆன்சர் பேப்பரை காட்டுடா’!.. ‘மறுத்த நன்றாக படிக்கும் மாணவன்’.. கோபத்தில் கத்தியால் குத்த ஓடிய கொடூரம்..!