பொங்கல் தொகுப்பில் பல்லி என புகார் சொன்ன தந்தை.. தற்கொலை செய்த மகன்... என்ன நடந்தது ?
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் அமைந்துள்ள தோட்டக்கார மடம் தெருவை சேர்ந்தவர் நந்தன். அவருடைய வயது 65. கடந்த ஜனவரி 7 ஆம் தேதி, தமிழக அரசு வழங்கிவரும் பொங்கல் பரிசுப் பொருளை வாங்க ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2 க்கு அவர் சென்றுள்ளார். அங்கே 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய நந்தன், தனக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களைப் பிரித்திருக்கிறார்.
புளியில் பல்லி
நந்தனுக்கு வழங்கப்பட்ட பரிசுப் பையில் இருந்த புளி பாக்கெட்டை அவர் பிரிக்கும் போது அதற்க்குள் இறந்துபோன பல்லி கிடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த நந்தன் மீண்டும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கூட்டுறவு பண்டக கடை எண் 2க்குச் சென்று விபரத்தைக் கூறியுள்ளார். அப்போது அந்தக் கடையில் பணிபுரிந்துவரும் சரவணன் என்பவருடன் நந்தன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் அப்போது சரவணன் நந்தனை தரக்குறைவாக பேசினார் என்றும் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து தனக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் நந்தன் தெரிவிக்க இச்செய்தி வெளியே பரவியது. இந்நிலையில், வதந்தி பரப்புவதாகக்கூறி நந்தன் மீது திருத்தணி காவல்நிலையத்தில் புகாரளித்திருக்கிறார் சரவணன். இதனால் நந்தன் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
அயன் பட பாணியில்.. எக்குத்தப்பாக சிக்கிய இளம் பெண்! டெல்லி ஏர்போர்ட்டில் பரபரப்பு!
மகனின் திடீர் முடிவு
இந்நிலையில் தனது தந்தை மீது காவல்நிலையத்தில் பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளதாக மனமுடைந்த நந்தனின் மகன் குப்புசாமி (36) தீக்குளிக்க முயற்சித்ததாகக் கூறப்படுகிறது. குப்புசாமியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். ஆனால், குப்புசாமியின் உடலில் 80 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்டிருந்தாதால் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இந்நிலையில், காலை குப்புசாமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி திருத்தணி - அரக்கோணம் சாலையில் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.பி கோ.ஹரி தலைமையில அ.தி.மு.க-வினர் 300-க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொங்கல் பரிசில் பல்லி விழுந்ததாக ஊழியரிடம் முதியவர் கேள்வி எழுப்பிய விவகாரத்தில் தற்போது நேர்ந்திருக்கும் உயிர்ப்பலி அப்பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பொங்கல் பரிசு... '24 மணி நேரத்தில் மாறியது...' 'புதிய' சுற்றறிக்கை வெளியீடு...!
- ஹைய்யா ஜாலி...! பொங்கல் 'பரிசுத்தொகை' உறுதி...! எவ்வளவு கிடைக்கும்...? - வெளியாகியுள்ள 'மகிழ்ச்சி' தகவல்...!
- தமிழக அரசின் பொங்கல் பரிசு மற்றும் ரூ.2500 பணம்.. பெறுவதற்கான 'டோக்கன்' பற்றிய முக்கிய தகவல்!
- 'சாம்பாரில் கிடந்த பல்லி...' 'சென்னையை சேர்ந்த பிரபல தென்னிந்திய ஹோட்டல்...' 'டெல்லி போலீசார் வழக்கு பதிவு...' - வைரலாகும் வீடியோ...!