'லிவிங் டுகெதர்' ரிலேஷன்ஷிப்ல ஏதாவது 'பிரச்சனை'னா கேஸ் போடலாமா...? - உயர்நீதிமன்றம் அளித்த 'பரபரப்பு' தீர்ப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருமணம் செய்யாமல் லிவிங் டுகெதரில் இருப்பவர்கள் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர உரிமை உள்ளதா என உயர் நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை கூறியுள்ளது.

Advertising
>
Advertising

இந்தியாவில் லிவிங் டுகெதர் உறவு அதிகரித்து வரும் நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த கலைச்செல்வி என்பவர் தன்னை ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இவ்வழக்கு நீதிபதி வைத்தியநாதன் தலைமையில் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரணை செய்த நீதிபதி வைத்தியநாதன் 'திருமணம் செய்யாமல், ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள், குடும்பநல நீதிமன்றத்தில் வழக்குத் தொடர சட்டப்பூர்வ உரிமையற்றவர்கள்' என தெரிவித்துள்ளார்.

அதோடு, இந்த வழக்கு, பணப் பரிவர்த்தனை தொடர்பான முன்விரோதத்தால் தொடரப்பட்டுள்ளதாகவும் கூறி வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

LIVE-IN TOGETHER, COUPLE, COURT

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்