‘இந்த மாவட்டத்தில் மட்டும்’... ‘இப்படி வந்தாதான் மதுபானம் கிடைக்கும்’... 'புதிய நிபந்தனை விதித்த மாவட்ட நிர்வாகம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வரும் வியாழக்கிழமை முதல், சுமார் 40 நாட்களுக்கு பின்னர் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களை வாங்குவோருக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, டாஸ்மாக் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் மே 7-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. டாஸ்மாக் திறக்கப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக அரசு ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் தனி நபர் இடைவெளி 6 அடி தூரம் இருக்க வேண்டும், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன் புதிய நிபந்தனை விதித்துள்ளார். அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் குடை பிடித்து வருபவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடையில் மதுபானம் வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். திருப்பூரில் டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை உறுதி செய்ய இந்த  நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே கேரளா மாநிலம் ஆலப்புழா பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அனைவரும் வெளியே அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும்போது குடை எடுத்துச் செல்ல வேண்டும் என அறிவிக்கப்பட்டு அங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திலும் புதிய முயற்சியாக முன்னெடுக்கப்படுவத வரவேற்பை பெற்றுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்