ஃபர்ஸ்ட் 'அந்த ஆப்' இன்ஸ்டால் பண்ணிட்டு... வீடியோவ 'லைக்' பண்ணி 'ஸ்க்ரீன்சாட்' அனுப்புங்க...! 'சும்மா இருக்குறதுக்கு இதையாவது பண்ணுவோம்...' - 'ஆப்' மூலம் இளைஞர்களுக்கு வைத்த ஆப்பு...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை மாதவரம், பொன்னியம்மன் மேடு தணிகாச்சலம் நகரில் வசித்து வருபவர் தினேஷ். இவரின் நண்பர் சுந்தர் என்பவர் வேலை இல்லாத சூழலில் 'ShareMe' என்ற செயலியை லிங்க் மூலமாக இன்ஸ்டால் செய்துள்ளார்.

இதுகுறித்து சுந்தர்,  தினேஷுக்கு தெரியப்படுத்தியுள்ளார். அதோடு, முப்பதாயிரம் ரூபாய் செலுத்தி செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் செய்து லைக் செய்ததை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போஸ்ட் செய்தால் ஒரு பதிவிற்கு 18 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று நம்ப வைத்துள்ளார்.

எந்த வேலையும் இல்லாமல் இருப்பதற்கு இதையாவது செய்யலாம் என தினேஷும் அவரது நண்பர் லோகேஷும்  'ShareMe' செயலியை டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் செய்துவிட்டு, செயலியில் வரக்கூடிய வீடியோக்களை லைக் செய்து ஸ்க்ரீன்சாட்-ஐ ஷேர் செய்து வந்துள்ளனர். திடீரென்று ஒருநாள் செயலி செயல்படவில்லை.

அதன்பின் தான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த தினேஷ், இதுகுறித்து மாதவரம் காவல் நிலையத்தில் சென்று புகார் அளித்துள்ளார்.

இவர்களை போல 'ShareMe' செயலியின் மூலமாக ஏராளமானோர் ஏமாற்றப்பட்டு பணத்தை இழந்துள்ளது தெரியவந்தது. சென்னையில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் மோசடி குறித்து புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி குறித்து விசாரணை மேற்கொண்ட சென்னை மாநகர போலீசார், திருவல்லியை சேர்ந்த சையத் பக்ரூதின், மீரான் மொய்தின், முகமத் மானஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும், தலைமறைவாக உள்ள தமீம் அன்சாரி என்பவர் தேடப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்