சிறுவர்களுக்கு 'எமனாக' வந்த மின்னல்... 'எரிந்த' உடல்களை பார்த்து... 'கதறித்துடித்த' பெற்றோர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மழையை வேடிக்கை பார்த்த சிறுவர்கள் மின்னல் தாக்கி இறந்த சம்பவம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நேற்று மாலை 5 மணியளவில் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. மின்னல் தாக்கியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். ஸ்ரீமுஷ்ணம் கொம்பாடி பகுதியை சேர்ந்த ராம்குமார்(17) மற்றும் பிரவீன்குமார்(16) ஆகிய இரு சிறுவர்களும் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க விருத்தாசலம் சாலையில் உள்ள அருமைசெட்டிகுளம் என்னும் பகுதிக்கு சென்றனர்.
மழை பெய்ததால் ஓரமாக ஒதுங்கி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். திடீரென பிரவீன்குமார், ராம்குமார் இருவரையும் மின்னல் தாக்கியது. தொடர்ந்து அவர்கள் இருவரின் உடல்களும் பற்றியெரிய துவங்கின. இதைப்பார்த்த அப்பகுதி இளைஞர்கள் தீயை அணைத்து 2 பேரையும் சிகிச்சைக்காக ஸ்ரீமுஷ்ணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், 2 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பெற்றோர்கள், சிறுவர்கள் 2 பேரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- கொரோனா டெஸ்ட் முடிச்சிட்டு 'பஸ்'ல டிராவல்... செல்போனில் வந்த தகவலால்... ஓட்டம் பிடித்த சக 'பயணிகள்'!
- 'தமிழில்' ஊர்ப்பெயர்கள்... ஊர் பெயர்கள் மாற்றம் குறித்த 'அரசாணை' வாபஸ்!
- 'கதவை தட்டிய வீட்டு ஓனர்'... 'வீட்டிற்குள் அவர் கண்ட காட்சி'... 'அப்பாவுக்கு திதி வைத்த நாளில் மொத்த குடும்பத்திற்கும் நடந்த சோகம்!
- 'சென்னை'யில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்பவர்கள்... 'இந்த' சர்டிபிகேட்டை காட்டினால்... கொரோனா 'பரிசோதனை' கிடையாது!
- 'கொரோனா'வுக்கு நடுவுல இப்படி ஒரு கொடுமையா?... 20 பேர் பலியால் 'அதிர்ந்து' போன மாநிலம்!
- 'முகக்கவசம்' கட்டாயம்... பின்படிக்கட்டுகள் 'வழியாக' மட்டுமே ஏற வேண்டும்... பேருந்து இயக்கத்திற்கான விதிமுறைகள் உள்ளே!
- ஒரு 'பூஜ்யம்' அதிகமாகிருச்சு... பணத்தை அக்கவுண்ட்ல 'தப்பா' போட்டுட்டோம்... நிவாரண நிதியை 'திருப்பி' குடுங்க!
- "உன் உயிர் என் கைலதான்! வண்டி ஏத்தி கொல்லப்போறேன்!".. 'கோயம்பேட்டில்' இருந்து சொந்த ஊருக்கு 'போன 'கொரோனா' நோயாளி விடுத்த 'கொலைமிரட்டல்'!
- 'பாத்தா சும்மா இருக்க வேண்டியது தானே'... 'கத்தி கூப்பாடு போட்டா'... 'காதல் மனைவி கொடுத்த வாக்குமூலம்'... ஒரு நொடி போலீசாரே ஆடி தான் போனார்கள்!
- ஒரே மாவட்டத்தில் இன்று '107 பேருக்கு' கொரோனா... 'கோயம்பேடு' மார்க்கெட் மூலம் தொடர்ந்து 'உயரும்' பாதிப்பு...