ரூ.69 ஆயிரத்துக்கு ஏலம் போன எலுமிச்சம்பழம்.. அப்படி என்ன ஸ்பெஷல்? சுவாரஸ்ய பின்னணி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு முருகன் கோவிலில் எலுமிச்சம்பழங்கள் 69 ஆயிரத்திற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளன. இந்த சம்பவம் பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.
பத்மஸ்ரீ விருது நிகழ்வில் பிரதமர் முன் விழுந்த 126 வயது முதியவர்.. யார் இந்த சுவாமி சிவானந்தா?..
முருகன் கோவில்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனேந்தல் கிராமம். இங்கே உள்ள ரத்தினவேல் முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் 11 நாட்கள் நடைபெறும் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இந்த விழாவில் முதல் 9 நாட்கள் கோவிலில் உள்ள வேலில் தினம் ஒரு எலுமிச்சம்பழம் குத்திவைக்கப்படும்.
ஏலம்
கோவிலில் உள்ள வேலில் குத்திவைக்கப்பட்ட 9 எலுமிச்சம் பழங்களையும் திருவிழாவின் பதினோராவது நாளில் ஏலத்தில் விடுவர். கோவில் பூசாரி ஆணியால் செய்யப்பட்ட காலனியின் மேலே நின்றபடி இந்த ஏலத்தை நடத்தினார். இதில் ஒவ்வொரு எலுமிச்சம்பழமும் ஆயிரக்கணக்கில் ஏலம் போனது. இறுதியாக 9 எலுமிச்சம் பழங்களையும் ஏலத்தில் விட்டதில் 69,100 ரூபாய் கோவிலுக்கு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் 1,43,000 ரூபாய்க்கு இந்த எலுமிச்சம்பழங்கள் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.
குவிந்த பக்தர்கள்
விழுப்புரத்தில் உள்ள புகழ்பெற்ற ரத்தினவேல் முருகன் கோவில் திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் மட்டுமல்லாது கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்தனர்.
என்ன ஸ்பெஷல்?
கோவிலில் உள்ள வேலில் குத்திவைக்கப்பட்ட எலுமிச்சம் பழங்களை உண்டு வந்தால் குழந்தை பேறு உண்டாகும், செல்வம் செழிக்கும், திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள் இப்பகுதி மக்கள். ஏலத்தில் சிறப்பு எலுமிச்சம்பழங்களை பெற்றவர்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள இடும்பன் சந்நிதியில் படைக்கப்பட்ட கருவாட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. அதனை பக்தர்கள் கோவிலில் அமர்ந்து சாப்பிட்டனர்.
விழுப்புரம் அருகே எலுமிச்சம் பழங்கள் 69 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது குறித்து பலரும் ஆச்சர்யத்துடன் பேசி வருகின்றனர்.
ஒரே ஒரு சின்ன Change.. 600 கோடி லாபத்தை அள்ளிய ஆப்பிள் கம்பெனி.. ஓஹோ.. இதுதான் அந்த சீக்ரெட்டா..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- இப்படி ஒரு வைரம் இதுவரை ஏலத்துக்கே வந்தது இல்லயாம்.. ஆரம்ப விலையே இவ்வளவு கோடியா..!
- என்னங்க சொல்றீங்க? ஒரு கிலோ தேயிலை 99,999 ரூபாயா! அப்படி அதுல என்ன இருக்கு?
- 1992-ல் அனுப்பப்பட்ட 'மெசேஜ்' ஒரு கோடிக்கு ஏலம்...! அப்படி 'என்ன' ஸ்பெஷல்...? - வோடபோனுக்கு அடித்த ஜாக்பாட்...!
- 'ஒரு லெமன் 59,000 ரூபாய்...' அப்படி என்ன ஸ்பெஷல்...? இந்த எலுமிச்சைப்பழத்தை சாப்பிட்டால் 'அது' நடக்குமாம்...! - போட்டி போட்டு ஏலம் எடுத்த மக்கள்...!
- 'அமெரிக்கா போனாலும் படிச்ச பள்ளியை எப்படி மறக்க முடியும்'... '1.5 கோடி நிதியுதவி'... நெகிழ்ந்து போன விழுப்புரம் பள்ளி!
- 'இது ரோஜா அபிஷேகம் இல்ல'... 'மிளகாய் அபிஷேகம்'... காண்போரை மிரள வைத்த சாமியார்!
- குட் பை...! 'உங்க எல்லாரையும் விட்டு போறேன்...' 'தங்கச்சிய நல்லா பாத்துக்கோங்க...' - ஆயுத படைக் காவலரின் அதிர்ச்சி முடிவு...!
- “நானா கொளுத்திக்கல!!”.. ‘லாக்டவுனில் நடந்த காதல் திருமணம்!’.. ‘ஒரே மாதத்தில் நடந்த கோர சம்பவம்’!.. ‘இளம் பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்’!
- 'சென்னையில் மட்டுமா? இங்கயும் 'கொரோனாவின்' அட்டூழியம் 'குறையல'!.. மேலும் 'சில' மாவட்டங்களில் 'ஊரடங்கு'!
- 'குடும்பத்தையே சிதைத்த கொரோனா!'.. தாய் மகன்கள் உட்பட 3 பேர் பலி!.. இதயத்தை உறைய வைக்கும் சோகம்!