Legend Saravanan : “தி லெஜண்ட் படத்துக்கு அடுத்த படம் ரெடி.. விரைவில்”.. மாஸாக பேசிய சரவணன்..! வீடியோ
முகப்பு > செய்திகள் > தமிழகம்தி லெஜண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக முறையில் தயாரித்த திரைப்படம் ‘தி லெஜண்ட்’. லெஜண்ட் சரவணன் கதாநாயகனாக அறிமுகமான இந்த திரைப்படம் ஐந்து வாரங்களை கடந்து ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குளில் ஓடியது.
Also Read | Armaan Malik : ஒரே நேரத்தில் இரண்டு மனைவிகளும் கர்ப்பம்.. போட்டோ ஷூட் எடுத்து வெளியிட்ட யூடியூப் பிரபலம்.!
கடந்த 2022 ஜூலை 28 அன்று வெளியான 'தி லெஜண்ட்' படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை கோபுரம் சினிமாஸ் அன்புச்செழியன் பெற்றார். எமோஷன், ஆக்ஷன், காதல், காமெடி என கமர்சியல் மாஸ் படமாக பான் இந்தியா அளவில் 5 மொழிகளில் இப்படம் வெளியானது.
இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இயக்கிய இந்த படத்தில் விஜயகுமார், விவேக், விஜயகுமார், பிரபு, நாசர், சுமன், தம்பி ராமையா, ரோபோ சங்கர், மயில்சாமி, ஹரிஷ் பெரேடி, முனீஷ்காந்த், மன்சூர் அலிகான், ராகுல் தேவ், லிவிங்ஸ்டன், வம்சி கிருஷ்ணா, சிங்கம்புலி, லொள்ளு சபா மனோகர், அமுதவாணன், கே பி ஒய் யோகி, செல் முருகன், லதா, சச்சு, பூர்ணிமா பாக்யராஜ், கீத்திகா தேவதர்ஷினி, அய்ரா, தீபா ஷங்கர், யோகி பாபு, மாஸ்டர் அஸ்வந்த் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர்.
ஒரு எளிய மனிதன் தனது புத்திசாலித்தனத்தாலும், முயற்சியாலும், வலிமையாலும் அனைத்து எதிர்ப்புகளையும் தாண்டி ‘ஒரு லெஜண்டாக’ எப்படி உருவாகிறான் என்ற கருத்தை மையமாக வைத்து அனைத்து தரப்பினரும் ரசித்து பார்க்கும் வகையில் இப்படம் உருவாகியிருந்தது. இதனிடையே லெஜண்ட் சரவணன் நடிக்கும் அடுத்த படத்திற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் துவங்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவையில் கடை திறப்பு விழா ஒன்றுக்கு வந்திருந்த லெஜண்ட் சரவணன், “திரைத்துறை அடுத்து அரசியல் துறைக்கு வருவீர்களா?” என அவரது அரசியல் வருகை குறித்த கேள்விக்கு பதில் அளிக்கும் போது, செய்தியாளர்களிடம் பேசிய லெஜன்ட் சரவணன், “அதை அந்த மக்களும் மகேசனும் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று சிரித்துக் கொண்டே குறிப்பிட்டார். மேலும், “மக்களின் மனநிலை என்னவாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.?” என்று கேட்கப்பட்டபோது, “அதையும் அந்த மக்களே சொல்ல வேண்டும்” என்று தனக்கே உரிய பாணியில் இயல்பாய் பதில் சொன்னார்.
முன்னதாக அடுத்த திரைப்படம் குறித்து கேட்கப்பட்டபோது, அடுத்த திரைப்படம் ரெடி ஆகிவிட்டதாகவும், அதுகுறித்த அறிவிப்புகள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் யார் என்பதும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார.
மேலும் லெஜெண்ட் சரவணனிடம் நடப்பு ஆட்சி குறித்த உங்களுடைய பார்வை எவ்வாறு இருக்கிறது என கேட்கப்பட்டபோது, “நல்லா போயிட்டு இருக்கு.. அரசியலும் சரி.. மக்களின் எண்ணங்கலும் சரி வேகமாகவும் சீரிய சிந்தனைகளுடனும் போய்க்கொண்டு இருக்கிறது. எல்லாமே பரிமாண வளர்ச்சிதான்..” என்றும் குறிப்பிட்டார். குறிப்பாக, “தமிழகத்தை பொறுத்தவரை ஆட்சி எப்படி இருக்கிறது” என்று கேட்கப்பட்டதற்கு, “ஆட்சி சிறப்பாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ”சிங்கார வேலனே தேவா...” - நாதஸ்வர இசை மேதை காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நூற்றாண்டு - காலத்தால் அழிக்க முடியாத இசைக்கலைஞனை போற்றுவோம்!
- ‘என் தந்தையின் கனவை நிறைவேற்றிவிட்டேன்’... அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ‘ஓய்வு’... ரஞ்சி கோப்பை ‘லெஜண்ட்’ திடீர் அறிவிப்பு...
- ‘எல்லாரும் விளையாடுவாங்க ஆனா இது தோனியால மட்டும்தான் முடியும்..’ அவர் ஒரு லெஜண்ட்.. புகழ்ந்து தள்ளிய கேப்டன்..