பல வருஷமா ‘அரியர்ஸ்’ வச்சுருக்கவங்களுக்கு கடைசி வாய்ப்பு...! அப்ளை பண்ண கடைசி தேதியும் அறிவித்தது அண்ணா பல்கலைகழகம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

இருபது வருடங்களாக படித்து இன்னும் பட்டம் வாங்காமல் அரியர்ஸ் வைத்திருப்போருக்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு துறை ஓரு அறிய நற்செய்தியை வெளியிட்டு உள்ளது. 

இந்தியாவின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்று அண்ணா பல்கலைக்கழகம். 1978ஆம் ஆண்டில், சென்னையில் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், பொறியியல், தொழில்நுட்பம் மற்றும் அதன் தொடர்புடைய அறிவியல் துறைகளில் உயர்கல்வி பட்டப்படிப்புகள் வழங்குவதுடன் ஆராய்ச்சிப் பணிகளையும் மேற்கொள்கிறது.

தற்போது அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை மாணவர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது. இந்த அறிவிப்புகள் மாணவர்களிடமிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் பல்கழைக்கழம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அன்னம்பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 20 ஆண்டுகளாக தங்களுடைய இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறாமல் அரியர்ஸ் வைத்திருக்கும் மாணவர்கள் வரும் ஏப்ரல் அல்லது மே 2020 மாதங்களில் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், இதுவே அவர்களுக்கு கொடுக்கப்படும் கடைசி வாய்ப்பு என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த இறுதி வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களுடை பட்டப்படிப்பினை முடிக்க முயற்சிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.

இந்த அறிய வாய்ப்பினை பற்றி மேலும் தெரிந்து கொள்ளவும், தேர்வுக்கு விண்ணப்பிக்கவும் அண்ணா பல்கலைக்கழகத்தின் https:coe1annauniv.edu என்ற இணையதளத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இன்று முதல் அதாவது 13.03.2020 முதல் 23.03.2020 தேதி வரை மட்டுமே இந்த சிறப்புத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிக்கையில் குறிப்பிடபட்டு உள்ளது.

EXAM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்