“ஒரு காலத்துல லட்சக்கணக்குல நடந்த உற்பத்தி” .. சென்னையில் பிரபல கார் நிறுவனத்தின் கடைசி கார்..?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் இயங்கி வந்த ஃபோர்டு கார் தொழிற்சாலையின் கடைசி கார் தற்போது உருவாக்கப்பட்டிருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | "புதுசா வீடு வாங்கி, வேல பாத்தப்போ.." தரைக்கு அடியில் கிடந்த பொருள்.. "ஒரு நிமிஷம் அந்த தம்பதிக்கு அள்ளு விட்டுருச்சு"

சென்னையை அடுத்து இருக்கிறது மறைமலைநகர். இங்கு பெரும்பாலும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் ஃபோர்டு கார் முக்கியமானதாக விளங்குகிறது. சென்னையில் ஃபோர்டு கார் தொழிற்சாலை கடந்த 10 ஆண்டுகளாக இழப்பை சந்தித்து வருவதாக கூறி, இந்த தொழிற்சாலை ஜூன், ஜூலை மாதத்துடன் நிரந்தரமாக செயல்பட போவதில்லை என்று ஏற்கனவே நிர்வாகம் அறிவித்திருந்ததாக கூறப்படுகிறது.

இதே போல் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பலரும் இந்த அறிவிப்பினால் இந்த தொழிற்சாலையை மிகவும் மிஸ் பண்ணுவதாக தெரிவித்திருந்தனர். பலரும் இழுத்து மூடவேண்டாம் என கோரிக்கை விடுத்தனர்ர்.  ஃபோர்டு நிறுவனம் என்பது அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனம். இந்தியாவில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் வாகனங்களை உற்பத்தி செய்து வந்த இந்த ஆலை வருடத்திற்கு நான்கு லட்சம் கார்களை உற்பத்தி செய்ய முடியும் என்கிற நிலை முன்பாக இருந்தது.

இந்த நிலையில் ஃபோர்டு தொழிற்சாலை ஜூலை 31ஆம் தேதியுடன் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சென்னை மறைமலைநகர் ஃபோர்டு தொழிற்சாலையில் ஃபோர்டு கார் உற்பத்தி தற்போது நிறைவடைந்திருக்கிறது. இந்த தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட கடைசி காரான எக்கோ ஸ்போர்ட்ஸ் காரை சென்னை தொழிற்சாலை உருவாக்கி முடித்து இருக்கிறது. இந்த கடைசி காரை அலங்கரித்து அணிவகுத்து நிறுத்திய ஃபோர்டு நிறுவனத்தின் ஊழியர்கள் கனத்த இதயத்துடன் இந்த காரை காட்சிப்படுத்தியுள்ளனர்.

Also Read | "உங்க நேர்மை பிடிச்சிருக்கு சார்".. தனது 10 ஆம் வகுப்பு மார்க்ஷீட்டை ஷேர் செஞ்ச ஐஏஎஸ் ஆபீசர்.. மார்க்கை பாத்துட்டு திகைச்சுப்போன நெட்டிசன்கள்..வைரல் Pic..!

CHENNAI, CHENNAI FORD PRODUCTION FACTORY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்