'வூஹான் ஆய்வகத்தில் என்ன தான் நடந்தது'... 'நான் அங்க 5 வருஷம் இருந்தேன்'... உண்மையை உடைத்த விஞ்ஞானி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

உலக நாடுகள் பலவும் வூஹான் ஆய்வகத்தைத் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

கொரோனாவின் இரண்டாவது அலை உலகையே ஆட்டம் காண வைத்துள்ள நிலையில் கொரோனா தொற்றின் பிறப்பிடமாக வூஹான் ஆய்வகத்தை உலக நாடுகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியிருந்த விஞ்ஞானி Danielle Anderson, வூஹான் ஆய்வகத்திலிருந்து கொரோனா கிருமிகள் வெளியேறியது என்ற கருத்தை முற்றாக மறுத்துள்ளார்.

தான் அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், சீன விஞ்ஞானிகளைத் தவிர்த்து வெளிநாட்டினர் தாம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது மெல்போர்னில் பணியாற்றிவரும் விஞ்ஞானி டேனியல் ஆண்டர்சன் வுஹான் ஆய்வகத்தில் 2016 முதல் 2019 நவம்பர் வரை ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

வௌவால்களால் நோய்க் கிருமிகள் பரவுவது கண்டறியப்பட்ட நிலையில், அந்த கிருமிகளால் வௌவால்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என்பதே இவர் முன்னெடுத்த ஆய்வு. வூஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய பலர், கொரோனா போன்ற தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சையை நாடியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில், அவ்வாறு நடந்திருந்தால், தாம் ஏன் பாதிக்கப்படவில்லை எனவும், 2019 நவம்பர் வரையில் அந்த ஆய்வகத்தில் தாம் பணியாற்றி வந்துள்ளதையும் விஞ்ஞானி டேனியல் சுட்டிக்காட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்