‘ஊரடங்கால்’ தொழிலாளர்கள் மற்றும் புலம் பெயர்ந்தோரிடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வாங்க கூடாது! மத்திய உள்துறை அமைச்சகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஒரு மாத வீட்டு வாடகை வசூலிக்கக் கூடாதென்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுரை கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றினால் நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் பல்வேறு அமைப்புசாரா மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதுகுறித்து மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அதன்படி புலம்பெயர்ந்த மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களிடமிருந்து வீட்டு உரிமையாளர்கள், வாடகைதாரர்களிடம் ஒரு மாத வாடகை வாங்க கூடாது என்றும் குறிப்பாக தொழிலாளர்கள், மாணவர்கள் உள்ளிடடோரிடம் வீட்டு வாடகை வரக்கூடாது என்றும் அதில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை வாடகை தராததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் நிலையில் வீட்டு உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு உத்தரவை காரணம் காட்டி தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களுடைய ஊழியர்களுக்கு எந்த சம்பளமும் பிடித்து நிறுத்தி வைக்கக்கூடாது என்றும், உள்ளபடியான சம்பளத்தை முறையாகக் கொடுக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை செய்துள்ளது.

CORONA, CORONAVIRUS, CORONACURFEW, 21DAYSLOCKDWON

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்