'காலைல எழுந்திரிச்சி அழுவேன்.. அந்தப் பழிய தாங்கிக்க முடியல'.. லஷ்மி ராமகிருஷ்ணன் பேட்டி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்'நான் என்ன தப்பு பண்ணினேன். குழந்தை விவகாரத்தில் தன்னுடைய தவறு எதுவும் இல்லை' என்று தன்னுடைய நிகழ்ச்சியில் நடந்த வருத்தமான நிகழ்வை பற்றி மனம் திறக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.
நாமக்கல் ராசிபுரத்தில் பணத்துக்காக, குழந்தைகளை கடத்தும் அவலம் அரங்கேறியுள்ளது. அதேபோல் தனது நிகழ்ச்சியில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி இங்கே மனம் திறக்கிறார் லஷ்மி ராமகிருஷ்ணன்.
'பணத்துக்காக யாரும் குழந்தைகளை விற்பது இல்லை. ஆனால் குடும்ப சூழ்நிலையைக் கருதி, குழந்தைகளை விக்கிற ஏழை மக்கள் பின்னால் வருத்தப்படுத்தப்படுகிறார்கள்' என்று கூறியுள்ளார். குழந்தையை விற்ற அவர்கள், யாரிடம் தன்னுடைய குழந்தை இருக்குனு தெரிஞ்சதும், குழந்தையை வாங்கியவர்களிடம், போய் பிரச்சனையை கிளப்புவதும் உண்டு என்று தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் குழந்தை கடத்தல் விவகாரம் மனம் வருத்தம் ஏற்படுத்தியதாக கூறியுள்ள லஷ்மி ராமகிருஷ்ணன், சில இடங்களில் குழந்தைகள் தவறான இடத்திற்கு போவதற்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார். குழந்தையை விற்றுவிட்டு பின்னர், குழந்தை வளர்ந்து சொத்துக்காக சில பெற்றோர் சண்டையிடுவதும் உண்டு என்று அவர் கூறியுள்ளார்.
தன்னுடைய நிகழ்ச்சியில் அப்படி ஒரு மனம் வருந்தத்தக்க, ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக லஷ்மி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ஏழ்மை நிலையில் உள்ள ஒரு பெண், 'தன்னுடைய குழந்தையை வாங்கி தரச்சொல்லி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு வந்ததாக' அவர் கூறியுள்ளார். பின்னர் 'அந்தப் பெண்ணை சட்டரீதியாக அணுக வலியுறுத்தியிருந்தேன், ஆனால், அதில் நடந்த சம்பவங்களால், நான் பல நாள் காலையில் எழுந்து அழுதிருக்கேன்' என்று கவலையுடன் தெரிவித்துள்ளார். அவரது விரிவானப் பேட்டியை இங்கே காணலாம்.
மற்ற செய்திகள்