'கையில் குழந்தைகளும், உடைமைகளுமாய்'... வீதியெங்கும் 'கணவனைத்' தேடி அலைந்த ...பெண்ணிற்கு நேர்ந்த சோகம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரை அருகே கைகளில் இரண்டு குழந்தைகளுடன் தனது கணவரைத் தேடி அலைந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் இருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த பபிதா என்பவர் திருப்பூரிலுள்ள மாவு மில் ஒன்றில் வேலை பார்த்த போது அங்கு அவருடன் வேலை செய்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த சுரேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு மூன்று வயதில் ஒரு மகனும், 2 வயதில் ஒரு மகளும் உள்ளனர். முன்னதாக திருமணமான சில மாதங்களிலே இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
போலீஸில் புகாரளித்து கணவர் சுரேஷுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்துள்ளார் பபிதா. இருப்பினும் குழந்தை பிறந்த பிறகும் கூட கணவர் தன்னை பிரிந்து சென்று விட்டதாகவும், கணவரை மீண்டும் கண்டுபிடித்து தருமாறும் காவல் நிலையத்திற்கு பல முறை ஏறி இறங்கியுள்ளார். இறுதியில் சுரேஷை கைது செய்த போலீஸார், சில மாதங்களுக்கு முன் இருவரை இணைத்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் சுரேஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளை தனியே தவிக்க விட்டு சென்றுள்ளார்.
முந்தானையில் குழந்தைகளை முடிந்து வைத்து கொண்டு, கையில் உடைமைகளுடன் மதுரையின் பல பகுதிகளில் தனது கணவரைத் தேடி அலைந்துள்ளார் பபிதா. மதுரை பனகல் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த போது பசி மயக்கத்தில் மயங்கி விழுந்துள்ளார் பபிதா. உடனே அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பதறிய படி ஓடி வந்து பபிதா மற்றும் குழந்தைகளுக்கு தேவையான உணவை வாங்கி கொடுத்தனர்.
பபிதாவின் நிலையை அறிந்தவர்கள் மிகவும் வருந்தினர். பபிதாவிற்கு விரைவில் நீதி கிடைக்க அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'கேன்சர் உள்ளிட்ட கொடிய நோய்களை ஏற்படுத்தும்... ரசாயனம் கலந்த '2 டன் மீன்கள்' பறிமுதல்'!... பதைபதைக்க வைக்கும் வியாபார உத்திகள்!
- என்ன 'கண்ணுங்களா' ரெடியா ! ... ஆல் இஸ் வெல் 'மக்களே'.. நாளை ஆரம்பமாகும் 'பிளஸ் 2' தேர்வு'
- ‘இந்த 3 மாதங்களும்’... ‘பத்திரமா இருந்துக்கோங்க’... ‘எச்சரிக்கும் வானிலை மையம்’... தகவல்கள் உள்ளே!
- 'ஏன் ரெண்டு பேரும் பயப்படுறீங்க? என்ன ஆச்சு...?' 'ஊசியைக் காட்டி மிரட்டி...' 'மருந்து வாங்க வந்த குழந்தைகளிடம்...' பதற வைக்கும் சம்பவம்...!
- உணவு 'ஆர்டர்' செய்த நபர் ...'இலையைப் போட்ட 'சர்வர்'.. இறுதியில் சர்வருக்கு நேர்ந்த வேதனை சம்பவம்
- ‘மாட்டுப்பண்ணையில் ஏற்பட்ட திடீர் மின்கசிவு’.. ‘கன்றுக்குட்டிகள் உட்பட 30 பசு மாடுகள் பலி’.. உசிலம்பட்டி அருகே சோகம்..!
- "எம்.ஜி.ஆர் மலையாளி, ஜெயலலிதா பிராமணர்..." "இருந்தாலும் திராவிடர் தலைவராக ஏற்றுக் கொண்டோம்..." அமைச்சர் 'செல்லூர் ராஜு' பரபரப்பு பேச்சு...
- “சிங்கத்தைப் பிடித்துச் சென்ற எமனுக்கு..”.. ‘பரபரப்பை கிளப்பிய’.. ‘அஞ்சலி போஸ்டர்’!
- மதுரை ஸ்பெஷல் ஜிகர்தண்டா... இனி இந்த நாட்டிலும் கிடைக்கும்... சந்தோஷத்தில் மக்கள்!
- வீட்ல 'கொழந்தைங்கள' வச்சுக்கிட்டு... இப்டித்தான் பண்றதா?... 'மதுரை' நபரை தட்டித்தூக்கிய போலீஸ்!