ரயில்வே ஸ்டேஷனில் வலிப்பு நோயால் சரிந்த நபர் .. ஓடிப்போய் உதவிய பெண் போலீசுக்கு குவியும் பாராட்டுகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

ரயில்வே நிலையத்தில் வலிப்பு நோயால் மரணம் அடைந்த நபரின் உடலை யாரும் தொட முன்வராத நிலையில் அங்கு வந்த பெண் போலீஸ் அதிகாரி சக அதிகாரி ஒருவரின் உதவியோடு இறந்தவரின் உடலை தூக்கி வாகனத்தில் வைத்திருக்கிறார். இந்த சம்பவம் பலரை நெகிழ வைத்து இருக்கிறது.

Advertising
>
Advertising

"தலைநகருக்கு உள்ள வந்துடுச்சு அந்த க்ரூப்.. தயாரா இருங்க"..உக்ரைன் அதிபருக்கு உளவுத்துறை அனுப்பிய சீக்ரட் மெசேஜ்..!

வலிப்பு நோய்

கடந்த திங்கட் கிழமை இரவு அல்லிகுளம் ரயில்வே நிலையத்திற்கு தனது சித்தியுடன் ஒருவர் வந்து இருக்கிறார். அப்போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டது. இதனால் கீழே விழுந்து துடித்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார். அவரை காப்பாற்ற உடன் வந்திருந்த அவரது சித்தி எவ்வளவோ பாடுபட்டும் பலன் கிடைக்கவில்லை.

யாரும் உதவவில்லை

இதனிடையே மரணம் அடைந்தவரின் உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த கூட அங்கிருந்த யாரும் முன்வரவில்லை. அழுகையுடன் அவரது சித்தி நின்றிருந்த வேளையில், ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்த லீலாஸ்ரீ என்னும் காவல்துறை அதிகாரி விஷயம் அறிந்து உடனேயே சென்று இருக்கிறார்.

அப்போது அவர் தனது சக அதிகாரி ஒருவருடன் இணைந்து வலிப்பு நோயால் மரணம் அடைந்த நபரின் சடலத்தை ஆம்புலன்சில் ஏற்றி அனுப்பி இருக்கிறார். இறந்தவரின் சடலத்தை அப்புறப்படுத்த யாருமே முன்வராத நிலையில் சக அதிகாரியுடன் உடலை ஆம்புலன்சில் ஏற்றிய லீலா ஸ்ரீயை காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் வரவழைத்து பாராட்டினர் .

கஷ்டத்தில் தவிக்கும் மக்களுக்கு உதவ வேண்டும் என்ற அடிப்படை மனிதாபிமானத்தை மறந்து, வலிப்பு நோயால் மரணம் அடைந்த நபரின் உடலை பலரும் தொட மறுத்துவந்த நிலையில், பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் சக அதிகாரியுடன் இணைந்து உடலை அங்கிருந்து அப்புறப்படுத்தியது அனைவரையும் நெகிழ வைத்து இருக்கிறது.

தடுப்புச் சுவரில் மோதிய ஜீப்.. சம்பவ இடத்திலேயே பலியான திமுக எம்பி என்.ஆர்.இளங்கோவன் மகன்..விசாரணையில் போலீஸ்..!

LADY POLICE OFFICER, HELP, MAN, EPILEPSY, HIGHER OFFICIALS, பெண் போலீஸ், வலிப்பு நோய்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்