'சென்னையில் களம் காண்கிறாரா குஷ்பு'?... 'அவர் டார்கெட் செய்யும் 2 தொகுதிகள்'... குஷ்பு எதிர்க்க போகும் பிரபலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே குஷ்பு கடந்த ஒரு மாதமாகத் தனது தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

சென்னையைப் பொறுத்தவரை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி என்பது திமுகவின் கோட்டையாகவே கருதப்படுகிறது. கடந்த 1977 முதல் இந்த தொகுதியில் தி.மு.க.வே வெற்றி பெற்று வருகிறது. மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டு 3 முறை வெற்றி பெற்றிருக்கிறார். 1991 தேர்தலில் மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் ஜீனத் சர்புதீன் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தி.மு.கவின் கோட்டையாகக் கருதப்படும் இந்த தொகுதியில் போட்டியிட உதயநிதி ஸ்டாலின் விருப்ப மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்தச்சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து பா.ஜனதா சார்பில் குஷ்பு களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள குஷ்பு கடந்த ஒரு மாதமாக இந்த தொகுதியில் தேர்தல் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இதுகுறித்து பேசிய குஷ்பு, ''இந்த தொகுதியில் தான் போட்டியிடுவேனா என்பதைக் கட்சி தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் உதயநிதி இந்த தொகுதியில் போட்டியிட்டால் சந்தோஷம்'' எனக் கூறியுள்ளார். குஷ்பு இப்போதே தொகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருவது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்