குன்றத்தூர்: 'மருத்துவமனைக்கு' கொண்டு செல்லும்போது 'உயிரிழந்த' 36 வயது இளைஞருக்கு கொரோனா உறுதி!'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை அருகே உள்ள குன்றத்தூரில் கொரோனாவுக்கு 36 வயது இளைஞர் ஒருவர் பலி ஆகியுள்ளார்.

தமிழகத்தில் இன்று மேலும் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், பலர் குணமாகியுமுள்ளனர். இதனால், தற்போது மட்டும் தமிழகத்தில் கொரோனா தொற்று  சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 885 ஆக உள்ளது.

இந்த நிலையில் குன்றத்தூரில் வெல்டிங் வேலை செய்துகொண்டிருந்த இளைஞர் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் உண்டானதை அடுத்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து அவரது உடலை பரிசோதித்தபோது அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதன் பின்னர், அவரது குடும்பத்தாருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் அந்த இளைஞர் வசித்த பகுதியில் இருந்த காய்கறி விற்பனையாளர்களிடம் இருந்து அவருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல், அந்த இளைஞர் கடுமையான சுவாச நோய்த்தொற்று, ஹைப்போ தைராய்டிசம் மற்றும் உடல் பருமன் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்