‘2 மகள்களையும் தூக்கிக்கொண்டு போய்’.. ‘மதுபோதையில் தந்தை செய்த காரியம்’.. ‘பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கும்பகோணம் அருகே மதுபோதைக்கு அடிமையான தந்தை தனது 2 மகள்களையும் ஆற்றில் வீசிய கொடுமை நடந்துள்ளது.

கும்பகோணம் பத்தடி பாலத்தைச் சேர்ந்த பாண்டி  - ரேணுகா தேவி தம்பதிக்கு ஷோபனா (13), லாவண்யா (11), ஹரீஷ் (9), ஸ்ரீமதி (7), குணசேகரன் (5) ஆகிய 5 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த ஒரு வருடமாக இருவரும் தனியாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று ரேணுகாவின் சகோதரருடன் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்து மதுபோதையில் இருந்த பாண்டி தனது மகள்கள் லாவண்யா மற்றும் ஸ்ரீமதியை அரசலாற்றில் வீசியுள்ளார். இதைப்பார்த்த அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஆற்றில் குதித்து சிறுமிகளைத் தேடியுள்ளனர். அப்போது லாவண்யா மட்டும் ஆற்றிலிருந்து அவர்களால் மீட்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையே மதுபோதையில் குழந்தைகளை ஆற்றில் வீசிய பாண்டியை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். ஆற்றில் வீசப்பட்ட ஸ்ரீமதியை 2வது நாளாக தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

KUMBAKONAM, FATHER, DAUGHTER, RIVER, WIFE, FAMILY, PROBLEM, DRUNKEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்