கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோவில் பல்லக்கில் இருந்து திருடப்பட்ட வெள்ளி தகடுகள்.. ஒருவர் கைது..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கும்பகோணத்தில் சாமி பல்லக்கில் இருந்த வெள்ளி தகடுகளை திருடியதாக ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | "பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது".. DGP சைலேந்திர பாபு விளக்கம்..!
ஆதி கும்பேஸ்வரர் ஆலயம்
கும்பகோணத்தில் அமைந்திருக்கும் ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் பாடல் பெற்ற திருத்தலமாகும். ஒவ்வொரு ஆண்டும் மாசி மகம் இங்கு விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில் கடந்த 25 ஆம் தேதி கொடியேற்றத்துடன் மாசி மக பெருவிழா துவங்கியிருக்கிறது. இதனை தொடர்ந்து 5 வெள்ளி பல்லக்கில் பஞ்ச மூர்த்திகளின் புறப்பாடும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் காலை புறப்பாடு நடைபெற்று பின்னர் பல்லக்குகள் அங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றன.
அதிர்ச்சி சம்பவம்
அப்போது, மர்ம நபர் ஒருவர் அங்க மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த பல்லக்கில் பொருத்தப்பட்டிருந்த வெள்ளி தகடுகளை திருடுவதை கோவில் பணியாளர் செல்வம் என்பவர் பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக பிடித்திருக்கிறார். இதற்குள் கோவில் பணியாளர்கள் மற்றும் செயலாளர் ஆகியோர் அங்கு கூடிவிட்டனர்.
புகார்
இதனை தொடர்ந்து இதுகுறித்து ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் செயலாளர் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். அப்போது, அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் அந்த மர்ம நபரை விசாரித்தனர். அதன் பலனாக அவர் கும்பகோணம் பழைய அரண்மனைக்காரத் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி மகன் மணிவண்ணன் என்பது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே அவரிடமிருந்து வெள்ளி தகடுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
5 பல்லக்குகள்
இது ஒருபுறம் இருக்க, ஆதி கும்பேஸ்வரர் ஆலையத்திற்கு சொந்தமான 5 பல்லக்குகளில் இருந்து காணாமல்போன வெள்ளி தகடுகளை கண்டுபிடிக்க வேண்டும் என கோவில் செயலாளர் கோ.கிருஷ்ணகுமார்ன் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், இதுகுறித்த விசாரணையில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
புகழ்பெற்ற ஆதி கும்பேஸ்வரர் ஆலயத்தின் பல்லக்கில் இருந்து வெள்ளி தகடுகளை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் விமானம் போலவே கனவு வீட்டை கட்டிய நபர்.. வைரலாகும் வீடியோ.!
மற்ற செய்திகள்
பட்டமளிப்பு மேடையில் ரஞ்சிதமே ஸ்டைலில் Flying Kiss கொடுத்த மாணவர்.. ஒரு நிமிஷம் தலையே சுத்திடுச்சு!!
"பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வெளியான வீடியோ போலியானது".. DGP சைலேந்திர பாபு விளக்கம்..!
தொடர்புடைய செய்திகள்
- சாப்பாடு விஷயத்துல வந்த சண்டை.. தண்ணி எடுத்து அண்ணன் முகத்தில் ஊற்றியதால் ஜெயிலுக்கு போன தம்பி.. பரபர பின்னணி!!
- மரணத்திலும் ஒன்று சேர்ந்த தம்பதி.. கணவன் உயிரிழந்த கொஞ்ச நேரத்தில் மனைவிக்கு சேர்ந்த சோகம்..!
- இந்தியாவையே உலுக்கிய மேவாட் கேங்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய தமிழக போலீஸ்.. பதறவைக்கும் பின்னணி..!
- தளும்ப தளும்ப ரூ.80 ஆயிரத்துக்கு பெட்ரோல் போட்டுட்டு சொகுசுக்காரில் வந்து 1000 ரூபாய் திருடிய கும்பல்.. அதுக்கு அப்றம் போலீஸிடம் சொன்ன விஷயம்தான்..!
- இன்ஸ்டா தோழிக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட்.. இளைஞர் போட்ட பிளான்.. கையோட கூட்டிட்டு போன போலீஸ்..!
- ஒரே அசதி... திருடப்போன இடத்துல தூக்கம் போட்ட ஆசாமி.. எழுப்பி கூட்டிட்டுப்போன போலீஸ்.. யாரு சாமி இவரு..!
- கல்யாணம் முடிச்சு ரயில் ஏறிய புதுமண தம்பதி.. பாதியிலேயே மணமகள் போட்ட பக்கா பிளான்.. கலங்கிப்போன மாப்பிள்ளை..!
- ஒரு வாரமா வீட்டுக்குள்ள இருந்து துர்நாற்றம்.. லிவிங் டுகெதரில் இருந்த வாலிபர் செஞ்ச பயங்கரம்.. விசாரணையில் வெளிவந்த திடுக் தகவல்கள்..!
- லிவிங் டுகெதரில் இருந்த இளம்பெண் மாயம்.. ஃபிரிட்ஜை திறந்தபோது திகைச்சு நின்ன போலீஸ்.. ஷ்ரத்தா வழக்கை போலவே நடந்த அடுத்த பயங்கரம்..!
- காதலிக்கு 'காதலர் தின' GIFT கொடுக்க இளைஞர் செய்த தகிடுதத்தம்.. கையோடு போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!