'சசிகலா'வை வரவேற்க காத்திருந்த 'தொண்டர்கள்'... 'திடீரென' பற்றி எரிந்த 'கார்'!!... பரபரப்பு 'சம்பவம்'!!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சொத்துக் குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த சசிகலா, பெங்களூருவிலுள்ள பரப்பன அக்ரஹர சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

தண்டனை காலம் முடியும் தருவாயில், சசிகலாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து, பெங்களூரிலுள்ள விக்டோரியா மருத்துவமனையில் அவர் சிகிச்சை முடிந்து பூரண குணமடைந்த நிலையில், தற்போது அவர் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே, பெங்களூர் முதல் சென்னை வரை சசிகலாவை வரவேற்க தொண்டர்கள், வழிநெடுக வரவேற்பளித்து வருகின்றனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே, அவரை வரவேற்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் காத்திருந்தனர். அப்போது, அங்கு தொண்டர்கள் வந்திருந்த இரண்டு கார்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

சசிகலாவை வரவேற்க வேண்டி, கொண்டு வரப்பட்ட பட்டாசுகள், தீப்பிடித்து எரிந்த கார்களில் ஒன்றிற்குள் இருந்துள்ளது. சாலையில் வெடித்த பட்டாசுகளின் நெருப்புத் துண்டு, அந்த காரிற்குள் சென்று விழுந்ததால் அதிலிருந்த பட்டாசும் வெடித்துச் சிதறியுள்ளது. இதன் காரணமாக, அதனருகே இருந்த காரின் மீதும் தீ பற்றியுள்ளது. இரண்டு கார்களும் திடீரென தீப்பிடிக்க ஆரம்பித்ததால், அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

காருக்கு அருகே ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்