'கொரோனா' தொற்று 'பூஜ்ஜியநிலை' அடைந்த 'கோயம்பேடு...' 'காரணம் இதுதான்...' 'ராயபுரத்திற்கும்' நீட்டிக்க 'உத்தரவு...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நூற்றுக்கணக்கில் கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்ட கோயம்பேடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று பூஜ்ஜிய நிலையை எட்டியுள்ளது. இதற்கு வீடு வீடாக சென்று மூலிகை தேனீர் கொடுத்தது நல்ல பலனைத் தந்துள்ளதாக சித்த மருத்துவர்கள்  தெரிவித்துள்ளனர்.

Advertising
Advertising

சென்னையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாவதற்கு காரணமாக இந்த 5 பகுதிகள் கூறப்படுகின்றன. அவை, ராயபுரம், திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, தேனாம்பேட்டை மற்றும் கோடம்பாக்கம் ஆகிய பகுதிகளாகும்.

கோடம்பாக்கம் மண்டலத்தை பொறுத்தவரை கோயம்பேடு மார்க்கெட் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளில் தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்னர். இதையடுத்து இப்பகுதியில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டன.

சித்த மருத்துவர்கள் அப்பகுதியில் வீடு வீடாகச் சென்று மருந்து வழங்கினர். 

15 வகையான மூலிகைகள் அடங்கிய தேனீர் தினமும் வீடு வீடாகச் சென்று விநியோகிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை குறைந்து தற்போது பூஜ்ஜியநிலையை எட்டியுள்ளது.

இதனால் சித்த மருத்துவர்களின் ஆட்டோவைப் பார்த்தார் பொதுமக்கள் தாங்களாகவே வீடுகளிலிருந்து வெளியே வந்து மூலிகைத் தேனீரை வாங்கி ஆர்வத்துடன் பருகுகின்றனர்.

கொரோனாவுக்கு எதிராக சிறப்பான எதிர்ப்பு சக்தியை மூலிகைத் தேநீர் வழங்குவதாக சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ராயபுரம் பகுதியில் நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் அப்பகுதியில் மூலிகைத் தேநீர் விநியோகிக்க அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்