'சட்டை அணியாமல்'... 'கையில் டிஃபன் பாக்ஸ் உடன்'... ‘போலீசாரை அதிரவைத்த நபர்’... ‘துயரத்தை ஏற்படுத்திய சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தூத்துக்குடி மாவட்டத்தில் தன்னை பிரிந்து சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை காண, மனநலம் பாதிக்கப்பட்ட கணவர் வெகு தூரம் நடந்து சென்ற சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கமலாபுரத்தினை சேர்ந்த தங்கராஜ் என்பவரது மகன் சண்முகராஜ். இவர் சென்னையில் உள்ள ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி முப்படாதி என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். சென்னையில் வேலை பார்த்து வந்த சண்முகராஜுவுக்கு தீடீரென மன நிலை பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால் தனது ஊரில் வசித்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தென்காசியில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு முப்படாதி தனது குழந்தைகளுடன் சென்று வசித்து வருகிறார்.
இதனால் தனிமையில் இருந்த சண்முகராஜ் இன்று அதிகாலை தனது ஊரில் இருந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க தென்காசிக்கு நடந்து செல்ல முடிவு எடுத்து, டிபன் பாக்சில் உணவு வைத்து கொண்டு நடக்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் கோவில்பட்டி சாத்தூர் சாலையில் சட்டை இல்லமால் டிபன்பாக்ஸ்வுடன் நடந்து சென்று கொண்டு இருந்த சண்முகராஜை பார்த்து அப்பகுதி பொது மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மேலும் பொது மக்கள் சண்முகராஜிடம் விசாரிக்க முயன்ற போது, பயந்து போய் வேகமாக ஓடி கீழே விழுந்துள்ளார். தகவல் கிடைத்தும் கிழக்கு காவல் நிலைய போலீசார் விரைந்து வந்து சண்முகராஜிடம் விசாரணை நடத்தினர். ஆனால் சண்முகராஜ் பேச மறுத்து அமைதியாக இருந்தார். இதனை தொடர்ந்து அவர் வைத்து இருந்த செல்போன் மூலமாக அவரை பற்றி அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
சண்முகராஜின் மனைவி மற்றும் உறவினர்களுக்கு போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். பிரிந்த சென்ற மனைவி மற்றும் குழந்தைகளை காண 34 கிலோமீட்டர் தூரம் சட்டையில்லமால் நடந்து சென்றவரால் கோவில்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘முன்விரோதம்’.. நள்ளிரவு நடந்த பயங்கரம்.. மர்மகும்பலால் ‘சென்னை’ இளைஞருக்கு நேர்ந்த சோகம்..!
- ‘அன்பா’ பழகுவேன், அப்புறம் ‘செல்போன்’ நம்பரை வாங்குவேன்.. போனில் பல ‘பெண்களின்’ வீடியோ.. அதிரவைத்த இளைஞர்..!
- சார் என் பொண்டாட்டிக்கு ‘பிரசவம்’.. ‘ரொம்ப சீரியஸ்’.. போனில் கேட்ட ‘அழுகுரல்’.. சட்டென களத்தில் இறங்கிய போலீசார்..!
- கொரோனாவால் இறந்தவங்கள ‘அடக்கம்’ பண்ண எதிர்ப்பு தெரிவிச்சா.. இனி ‘அதிரடி’ ஆக்ஷன் தான்.. காவல்துறை கடும் எச்சரிக்கை..!
- 'மனவருத்தமளிக்கிறது' மனிதநேயத்துடன் நடந்துகொள்ள வேண்டும்: தமிழக முதல்வர்
- நல்ல 'உணவு' குடுக்குற அளவுக்கு 'வருமானம்' இல்ல... என்னால 'முடிஞ்சது' இதுதான்!
- தலைமை காவலருக்கு ‘கொரோனா’.. தீவிர கண்காணிப்பில் உடன் வேலை பார்த்த 24 போலீசார்.. மூடப்பட்ட ‘காவல்நிலையம்’!
- "டைம் முடிஞ்சுது, கடையை சீக்கிரம் மூடுங்க"... எச்சரித்த 'போலீசார்'... 'மறுத்த' கடைக்காரர்கள்... அடுத்து நடந்த 'பரபரப்பு' சம்பவம்!
- காய்ச்சல் இருக்கவங்க இனி... 'ஓடவும்' முடியாது ஒளியவும் முடியாது... செம 'ட்ரிக்குடன்' களமிறங்கும் 'சென்னை' போலீஸ்!
- 'திருமணத்திற்காக' 850 கி.மீ சைக்கிளில் 'பயணம்' செய்த மணமகன்... கடைசியில் 'காத்திருந்த' அதிர்ச்சி!