'பைக்'கை தள்ளிக் கொண்டே வந்த 'இளைஞர்'... கூப்ட்டு வெச்சு 'போலீஸ்' விசாரிச்சதுல... தெரிய வந்த 'ஷாக்'... எப்படி வந்து சிக்கிருக்கான் 'பாருங்க'??!!!..
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம் பிள்ளையார்புரம் பகுதியில் போலீசார் சில தினங்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது நள்ளிரவில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தை தள்ளிக் கொண்டு வந்துள்ளார். சந்தேகத்தின் பெயரில் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் அந்த இளைஞர் சொன்ன தகவல்கள் அனைத்தும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், அந்த இளைஞரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார், அவரிடம் விசாரணையை தொடர்ந்தனர்.
அப்போது தான் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் என்றும், கோவையில் கிடைக்கும் வேலையை செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். பிடிபட்ட இளைஞரின் மீது, திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது. அது மட்டுமில்லாமல், போலீசாரிடம் சிக்கிய தினத்தன்று, அப்பகுதியிலுள்ள வீடு ஒன்றில் புகுந்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்து சங்கிலியை பறித்து வந்துள்ளார். அப்போது பைக்கில் பெட்ரோல் காலியாகி விட, அதனை தள்ளிக் கொண்டே வந்த போது தான் போலீசாரிடம் சிக்கியுள்ளார்.
பைக்கை தள்ளிக் கொண்டு வந்த போது, அந்த இளைஞருடன் வேறு ஒருவரும் இருந்துள்ளார். போலீசாரைக் கண்டதும் அந்த நபர் தப்பித்து ஓடியுள்ளதாக தெரிகிறது. மேலும், அந்த இளைஞர் திருடிய நகை கவரிங் என்பதும் தெரிய வந்துள்ளது. கைது செய்த இளைஞரிடம் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘பயணிகள் ரொம்ப கம்மி’... ‘இந்த மார்க்கத்தில் மட்டும்’... ‘டிசம்பர் 2 ஆம் தேதி முதல்’ ‘ரத்து செய்யப்படும் சிறப்பு ரயில்’... தெற்கு ரயில்வே அதிரடி...!!!
- "நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து ஜன்னலை திறந்து பெட்ரூமை பார்க்கும் இளைஞர்"! .. பீதியில் உறைந்த மக்கள்!
- 'இலங்கை நிழலுலக தாதா அங்கொட லொக்கா மரணம்'.. பிரேத பரிசோதனையில் பரபரப்பு திருப்பம்!!.. சிபிசிஐடி வெளியிட்ட முக்கிய தகவல்!
- கோவையில் 'பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்த காதல் திருமணம்!'.. 3வது நாளில் நடந்த பரபரப்பு சம்பவம்!
- 'மண்டை ஓடு' பிளந்து, மூளை வரை பாய்ந்த 'குண்டு'! - 'நொடி'யில் சுருண்டு விழுந்த 'யானை'... நெஞ்சை பிழிய வைக்கும் சோகம்!
- 'இ பாஸ்' கிடைக்கல... அதுனால அந்த கடையில இருந்து... போலீசாருக்கு அதிர்ச்சி கொடுத்த 'ஜெராக்ஸ்' கடை!
- #coronalockdown: ‘பணியாளர்களே இல்லை!’.. ‘ஆனாலும் பணத்தை வைத்துவிட்டு’.. நெகிழ வைத்த பேக்கரி கடையும் மக்களின் மனிதமும்!
- 'ஊரே அல்லோலப்பட்டு கெடக்கு' ... 'வாடகை ஒண்ணும் வேணாங்க' ... கோவை வீட்டு உரிமையாளரின் நெகிழ்ச்சி முடிவு!
- ‘70 கிலோ மீன்களில் பார்மலின் தடவி விற்பனை’.. 430 கிலோ கெட்டுப்போன மீன்கள்!.. ‘பீதியை கிளப்பிய மீன் மார்க்கெட்!’
- 'உல்லாசத்திற்கு' அழைத்த 'நடன அழகி'... 'புத்தாண்டு' அன்று தொழிலதிபருக்கு 'பொங்கல்' வைத்த கொள்ளைக் கும்பல்... தமிழ் படத்திலிருந்து 'கான்செப்ட்' திருடி 'கைவரிசை'...