"பெத்தவங்களோட விவசாயத்தை கையில எடுத்தோம்".. ஐடி வேலையை உதறிவிட்டு களத்தில் குதித்த பட்டதாரிகள்!!.. அடுத்து நடந்த அற்புதம்!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகே அமைந்துள்ள குத்தாரிபாளையம் என்னும் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி. இவரது மனைவி பெயர் புவனேஸ்வரி. இவர்கள் இருவருமாக இணைந்து விவசாயம் செய்வதையே பூர்வீகமாக கொண்டுள்ளனர்.
Also Read | Mortuary'ல் இருக்கும் உடலை பார்க்க போன மருத்துவர்.. பையை திறந்ததும் கண்ட அதிர வைக்கும் காட்சி!!
கிருஷ்ணசாமி - புவனேஸ்வரி தம்பதியருக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். இதில் மூத்த மகன் வருண் பிரகாஷ், சிவில் இன்ஜினியரிங் படித்துள்ளார். இளைய மகன் ரஜி பிரசாத் சாஃப்ட்வேர் இன்ஜினியர் படித்துள்ளார்.
இவர்கள் இருவருமே பொறியியல் பிரிவில் பட்டம் பெற்றதுடன் தனியார் நிறுவனத்திலும் கைநிறைய சம்பளத்துடன் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.
அப்படி இருந்த போதும், தங்களின் பெற்றோரின் விவசாய வேலை மற்றும் கால்நடை பராமரிப்பு உள்ளிட்ட பணிகளும் இவர்கள் மனதில் ஓடிக் கொண்டே இருந்துள்ளது. அது மட்டுமில்லாமல், சுயதொழில் செய்ய வேண்டும் என்றும் சகோதரர்கள் விரும்பி உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, மூத்த சகோதரர் வருண் பிரகாஷ் முதலில் வேலையை உதறி விட்டு பசு மாடுகளை வாங்கி, பால் கறந்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தொழிலும் சிறந்த முறையில் முன்னோக்கி சென்ற பின்னர், அவரது இளைய சகோதரரான ரஜி பிரசாத்தும் ஐடி கம்பெனி வேலையை விட்டு விட்டு சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
இதன் பின்னர், சகோதரர்கள் இருவரும் இணைந்து இன்னும் நிறைய மாடுகளை வாங்கி பால் உற்பத்தி மற்றும் விற்பனை நிலையம் ஆரம்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. இது பற்றி சகோதரர்கள் வருண் மற்றும் ரஜி ஆகியோர் பேசுகையில், விவசாய தொழில் தொடர வேண்டும் என்ற ஆர்வம் ஆரம்பம் முதல் இருந்தது என்றும், சரியாக திட்டம் போட்டு பால் பண்ணை துவக்கி தற்போது விற்பனை நிலையத்தை துவக்கி உள்ளோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்தில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளது என்றும் இளைஞர்கள் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள முன் வர வேண்டும் என்றும் இந்த சகோதரர்கள் குறிப்பிடுகின்றனர். பொறியியல் பணியில் கைநிறைய சம்பளத்துடன் வேலையில் இருந்த போதும், விவசாயம் மற்றும் கால்நடை பராமரிப்பு பணிகளில் இறங்கி அதில் வெற்றி பெற்றுள்ள சகோதரர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Also Read | Miss TamilNadu வென்ற கூலி தொழிலாளி மகள்.. தடையை தாண்டி சாதிச்சது எப்படி??.. Exculsive!!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- புது மைல்கல்லுக்கு ஆயுத பூஜை நடத்திய கிராம மக்கள்.. கோவை அருகே சுவாரஸ்யம்.. வைரல் Pic..!
- குப்பைத் தொட்டியிலும், கிணற்றிலும் தனித்தனியே உடல் பாகங்கள்.. தண்ணீர் பாட்டிலால் கிடைத்த துப்பு.. கோவையில் பதைபதைப்பு சம்பவம்!!
- "77 வருஷம் ஆச்சு என் தம்பி'ய பாத்து".. ஒரு வயதில் பிரிந்த சகோதரன்.. இத்தனை வருஷம் கழிச்சு நடக்க போகும் அற்புதம்!!
- சிறுவர்கள் எடுத்த 'செல்ஃபி'.. "கொஞ்ச நேரம் கழிச்சு பாக்குறப்போ, அதுல இன்னொரு ஆள் இருந்ததும் தெரிஞ்சுருக்கு".. அதிர்ச்சி சம்பவம்
- இன்ஸ்டா காதல்.. சொகுசு வாழ்கைக்காக காதல் ஜோடி எடுத்த முடிவு.. பரபரப்பில் கோவை..!
- "இத்தன வருசத்துல எவ்ளோ தடவ பாத்துருப்போம், அப்ப கூட தெரியாம போச்சே".. 7 வருசம் கழிச்சு தெரிய வந்த 'உண்மை'..
- குடும்பமா சேர்ந்து கொள்ளை.. "அடிச்ச பணத்துல 2 கோடி ரூபாய்க்கு வீடு.. கூடவே" அதிர வைத்த வாக்குமூலம்
- JEE முதல் நிலைத்தேர்வில் தமிழக அளவில் முதலிடம்.. சாதித்துக்காட்டிய கோவை மாணவி தீக் ஷா..!
- மனைவியை கொன்றுவிட்டு இறந்ததாக நினைத்து கணவர் எடுத்த திடுக்கிடும் முடிவு.. கடைசில தெரிய வந்த அதிர்ச்சி உண்மை.!
- "எங்க குழந்தைக்கு சாதியும் வேண்டாம், மதமும் வேண்டாம்".. கோவை பெற்றோர் எடுத்த அதிரடி முடிவு..!