'அதிகாலையில் வெளுத்த மழை'... 'ரயில் நிலையத்தில் நேர்ந்த கோர விபத்து'... '2 பேர் பலியான பரிதாபம்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் உள்ள இருசக்கர வாகன பார்சல் அலுவலகத்தில் மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
கோவையில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று நள்ளிரவு முதல் அங்கு கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை மழை மற்றும் பலத்த காற்று வீசியது. இதன் காரணமாக அதிகாலை 3.30 மணியளவில், கோவை ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலக கட்டிடம் இடிந்து விழுந்தது. கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தன.
இதனிடையே கட்டிட இடிபாடுகளுக்குள் மூன்று பேர் சிக்கி கொண்டார்கள். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும், இடிபாடுகளில் சிக்கிய ஒப்பந்த பணியாளர்கள் மூன்று பேரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.. மாற்றோருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரயில் நிலைய பார்சல் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் கோவையில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ரயில் நிலையத்தில் வெளுத்த மழை.. துடிதுடித்த கர்ப்பிணி'.. 'உதவ' வந்த ஆட்டோ டிரைவரின் கதி!
- 'நீ எனக்கு சொல்லி தர்றியா?'.. 'டிக்கெட் பரிசோதகரின் செயலால்'.. அதிர்ந்து போன ரயில் நிலையம்!
- ‘திடீரென ரயில்முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்..!
- ‘இந்தியக் கலாச்சாரத்திற்கு எதிரானது என எதிர்ப்பு..’ சேவை அறிவிப்பை ரத்து செய்தது இந்தியன் ரயில்வே..
- 'சேத்துப்பட்டு' ரயில் நிலையத்தில் ...'இளம் பெண்ணிற்கு நேர்ந்த பயங்கரம்'... கதிகலங்க வைக்கும் சம்பவம்!
- 'தமிழ்ல பேசாதீங்க' ... 'தென்னக ரயில்வே' அதிரடி உத்தரவு... வெடிக்கும் புதிய சர்ச்சை!
- ரயிலில் ‘சொகுசு மசாஜ்’ சேவை..! கோல்டு, டைமண்ட், பிளாட்டினம் என மூன்று வகை..
- 'செல்லாது.. செல்லாது..' 2 வருஷத்துக்கு பின் ரயில்வேயிடம் இருந்து 33 ரூபாயை திரும்பப் பெற்ற இளைஞர்!
- மெட்ராஸ் சென்ட்ரல் அப்டேட்: 'ரயில் நிலையத்துல மட்டும் இல்ல, ரயிலிலும் மாறிய பெயர்கள்’!
- நாளை மறுதினம் முதல் எந்தந்த ரயில்கள் எல்லாம் ரத்து! ரயில்வே துறையின் மீது மக்கள் அதிருப்தி!