பெண்கள் விடுதியில் லேடீஸ் கெட்டப்பில் உலா வந்து என்ன செஞ்சிருக்காங்க பாருங்க.. போலீசார் போட்ட தரமான ஸ்கெட்ச்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையில் உள்ள பெண்கள் விடுதியில் பெண்கள் விடுதி ஒன்றில் லேடிஸ் கெட்டப்பில் சென்று திருட முயற்சித்த இளைஞரை காவல்துறை கைது செய்திருக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களை திடுக்கிட வைத்திருக்கிறது.

Advertising
>
Advertising

கோவையில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில் சந்தேகத்திற்கிடமான ஒருவரின் நடமாட்டம் இருப்பதாக மாணவிகள் கடந்த மாதம் பல்கலைக்கழக துணைவேந்தரிடம் புகார் அளித்து போராட்டம் நடத்தினர். இது குறித்து விசாரணை நடத்தப்படும் என பல்கலைக்கழக துணைவேந்தர் உறுதியளித்த நிலையில் மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு வகுப்பறைகளுக்கு திரும்பினர். இதனையடுத்து கடந்த 10 ஆம் தேதி அதிகாலை பெண்கள் விடுதி இருந்த பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் நடமாட்டம் இருந்ததாகவும் மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லாப்டாப் எடுக்க முயற்சித்ததாகவும் பல்கலைக்கழக பதிவாளர் புகார் அளித்திருந்தார்.

 

இது குறித்து வடவள்ளி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். சந்தேக நபரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் கல்வீரம்பாளையம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித்திரிந்த சுரேந்தர் என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அதில் அவர் கல்வீரம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் என்பது தெரிய வந்திருக்கிறது.


லேப்டாப்

போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில் மகளிர் விடுதியில் சுவர் ஏறி குதித்து உள்ளே சென்று லேப்டாப் திருட முயற்சித்ததாக சுரேந்திரன் காவல்துறையிடம் ஒப்புக்கொண்டார். மேலும் பிறர் தன்னை அடையாளம் கண்டுபிடிக்காமல் இருக்க பல்கலைக்கழக விடுதியில் உள்ள மாணவிகளின் உடையை அணிந்து கொண்டு திருடிச் சென்றதாக சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் லேடிஸ் கெட்டப்பில் சென்று திருட முயற்சித்த இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

 

POLICE, LADIESHOSTEL, KOVAI, கோவை, லேடீஸ்ஹாஸ்டெல், லேப்டாப்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்