"ஒரு கஷ்டமும் வர கூடாது".. அம்மனுக்கு நடந்த அலங்காரம்.. அதுவும் ரூபா நோட்ல.. எவ்வளவு கோடி தெரியுமா? கோவையில் சுவாரஸ்யம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவையில் பிரபல அம்மன் கோவில் ஒன்றில் ருபாய் நோட்டுகளில் அலங்காரம் செய்தது பலரையில் ஆச்சர்யப்படுத்தி உள்ளது. 

Advertising
>
Advertising

Also Read | "எனக்கு அவ தான் வேணும்".. தோழியை திருமணம் செய்துகொண்ட பெண் வைத்த கோரிக்கை.. நீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு தீர்ப்பு..!

தமிழ் புத்தாண்டு

நேற்று சித்திரை 1 ஆம் தேதி, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தமிழ் புத்தாண்டை சீரும் சிறப்புமாய் கொண்டாடினர். இதனை அடுத்து தமிழகத்தின் முக்கிய திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. விடுமுறை என்பதால் கோவில்களில் நடைபெற்ற சிறப்பு தீபாராதனையில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.

கோவை காட்டூர் பகுதியில் உள்ளது அம்பிகை முத்துமாரியம்மன் கோவில். உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலுக்கு வழக்கமாக சாதாரண நாட்களிலேயே பெருமளவு மக்கள் கூட்டம் வரும். இந்நிலையில் நேற்று தமிழ் புத்தாண்டு என்பதால் இங்கே பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து காணப்பட்டது.

தனலெட்சுமி அலங்காரம்

நேற்று அம்பிகை முத்துமாரியம்மனுக்கு தனலெட்சுமி அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் 100, 200, 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளில் அம்மனுக்கு அலங்காரம் செய்திருந்ததை கண்டு மக்கள் பரவசமடைந்தனர். மேலும், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்களும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டன.

இப்படி அம்பிகை முத்துமாரியம்மனுக்கு செலுத்தப்பட்ட பணத்தின் மதிப்பு  4.5 கோடி என தெரிவித்திருக்கிறது இந்த கோவில் நிர்வாகம். இந்த தனலெட்சுமி அலங்காரத்தை தரிசிக்க அதிகாலை முதலே, பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். இந்த அலங்காரத்தில் அம்மனை தரிசனம் செய்தால் செல்வ செழிப்பு ஏற்படும் என நம்புகிறார்கள் பக்தர்கள்.

சிறப்பு பூஜை

கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகளில் செய்யப்பட்ட தனலெட்சுமி அலங்காரத்தை அடுத்தபடி  சிறப்பு பூஜைகளும் செய்யப்பட்டன. அதேபோல ஆசியாவின் மிகப்பெரிய விநாயகர் சிலை என கருதப்படும் புலியகுளம் விநாயகர் கோவிலில் மா, பலா மற்றும் வாழை ஆகியவை படைக்கப்பட்டு சிறப்பு புத்தாண்டு பூஜைகள் நடைபெற்றன.

கோவையில் 4.5 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் காட்டூர் முத்து மாரியம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளது.

Also Read | ஒருலிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய்..உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய நகரம்..

KOVAI, MUTHUMARIYAMMAN, CURRENCY NOTES, அலங்காரம், தமிழ் புத்தாண்டு, அம்மன் கோவில், ருபாய் நோட்டு

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்