3 ஆம் வகுப்புதான்.. ஆனா மொத்த பஞ்சாங்கமும் விரல் நுனியில.. தமிழக சிறுவனுக்கு கிடைத்த கௌரவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவையை சேர்ந்த 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மொத்த பஞ்சாங்கத்தையும் கற்று, தின பலன்களை கணித்து கூறுவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.

Advertising
>
Advertising

3 ஆம் வகுப்பு

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - நீலம் தம்பதியினர். இவர்களுடைய மகன் திரிசூல வேந்தன் அங்குள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்துவருகிறார். 7 வயதான திரிசூல வேந்தன் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள யுகங்கள், நட்சத்திரங்கள், நல்ல நேரம் ஆகியவற்றை விரல்நுனியில் படித்து வைத்திருக்கிறார். மேலும், ஒருவருடைய பிறந்த தேதியை கொண்டு அவருடைய ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை சில நிமிடங்களில் கணித்து கூறுகிறார் இந்த அதிசய சிறுவன்.

ஆர்வம்

திரிசூல வேந்தனுக்கு பஞ்சாங்கத்தின்மீது ஏற்பட்ட ஆர்வம் குறித்து பேசிய அவரது தாய் நீலம்," வீட்டில் இருந்த காலண்டரை ஆர்வத்துடன் அடிக்கடி பார்க்கும் வழக்கம் அவனுக்கு இருந்தது. அதனாலேயே மாதங்கள் மற்றும் கிழமைகளை கற்றுக்கொண்டான். அதைத் தொடர்ந்து தினசரி நாட்காட்டிகளில் உள்ள பஞ்சாங்க குறிப்புகள் குறித்து எங்களிடம் கேள்வியெழுப்பியபோது அவனுக்கு பஞ்சாங்கத்தில் ஆர்வம் இருப்பதை புரிந்துகொண்டோம்" என்றார்.

பயிற்சி

தனது மகனுக்கு பஞ்சாங்கத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்ட தம்பதியர் அவர்களது வீட்டிற்கு அருகில் இருந்த பூசாரி ஒருவரிடம் பஞ்சாங்க குறிப்புகளை கற்றுக்கொள்ள மகனை அனுமதித்துள்ளனர். வாரம் இரண்டு நாட்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டுவந்த சிறுவன் திரிசூல வேந்தன் சீக்கிரத்திலேயே அதனை கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த போது, கூடுதல் சிரத்தையுடன் பஞ்சாங்க குறிப்புகளை படித்துவந்த சிறுவன், ஒவ்வொரு நாளுக்கான திதி, நல்ல நேரம் ஆகியவற்றை கணிக்க கற்றுக்கொண்டார்.

சாதனை

தங்களது மகனின் இந்த திறமையை உலகறிய செய்யும் நோக்கில் திரிசூல வேந்தனின் விபரங்களை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பினர் இந்த பெற்றோர். இதனையடுத்து திரிசூல வேந்தனின் பெயர் அந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாக உள்ள, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் சிறுவன் திரிசூல வேந்தன் குறித்த குறிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 வயதே ஆன கோவை சிறுவன் முழு பஞ்சாங்கத்தையும் கற்று, தனது விரல்நுனியில் வைத்திருக்கும் சம்பவம் பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8

KOVAI, PANJANGAM, THIRISOOLAVENTHAN, கோவை, சிறுவன், பஞ்சாங்கம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்