"இது என் கனவுங்க" - கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா.. பேட்டி

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவை காந்திபுரம் - சோமனூர் தடத்தில் தனியார் பேருந்தை இயக்கி வரும் ஷர்மிளா, கோவை மாநகரின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுனராக வைரலாகியுள்ளார்.

Advertising
>
Advertising

கோவை வடவள்ளியைச் சேர்ந்த 24 வயதான இவர் பார்மசி படிப்பில் டிப்ளமோ படித்திருக்கிறார். இவருடைய தந்தை ஓட்டுநர் என்பதால் அவரைப் பார்த்து தானும் ஓட்டுநராக வேண்டும் என்று சிறுவயதில் இருந்தே கனவு கண்டிருக்கிறார். தந்தையின் உதவியுடன் இலகுரக வாகனங்கள் முதல், கனரக வாகனம் வரை ஓட்டுவதற்கு கற்றுக் கொண்ட ஷர்மிளா, கோவிட் தொற்றுக்காலத்தில் பலரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் விதமாக ஆட்டோ மற்றும் கால் டாக்ஸி ஓட்டி இருக்கிறார்.

2019 முதலே கோவையில் ஆட்டோ ஓட்டி வந்த ஷர்மிளா, இரண்டு முறை முயற்சி செய்து மூன்றாவது முறை கனரக வாகனம் ஓட்டி, பாஸ் ஆகி லைசென்ஸ் பெற்றுள்ளார். கோவை மாவட்டத்தின் முதல் பெண் தனியார் பேருந்து ஓட்டுனராக வரவேண்டும் என்ற இவருடைய மற்றும் இவருடைய பெற்றோருடைய கனவு தற்போது நிறைவேறி இருக்கிறது. இதனால் இவர் தற்போது ட்ரெண்டாகி வருகிறார்.

ஆரம்பத்தில், “டயர் சைஸ் கூட இல்லை.. நீ எல்லாம் பேருந்து ஓட்ட ஆசைப்படுகிறாயா?” என்றெல்லாம் கேலி கிண்டல் செய்தவர்களுக்கு மத்தியில் அவற்றையெல்லாம் தாண்டி தன்னுடைய கனவான பேருந்து ஓட்டுனராக வேண்டும் என்கிற ஆசையை விடாமுயற்சியாலும் தமது திறமையாலும் அடைந்திருக்கும் ஷர்மிளாவுக்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

BUS DRIVER SHARMILA, KOVAI, COIMBATORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்