"வீட்டு செலவுக்கு ஆன்லைன்ல கடன் வாங்கிய பெண்".. அதுக்கு அப்புறம் நடந்த மிரள வைக்கும் சம்பவம்.. கோவையில் பரபரப்பு
முகப்பு > செய்திகள் > தமிழகம்கோவையில் ஆன்லைன் மூலமாக கடன் வாங்கிய பெண்ணிற்கு தொந்தரவு அளித்து வந்த நான்கு பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
வெளில பியூட்டி பார்லர்.. உள்ள உல்லாச விடுதி.. கஸ்டமர் போல வலைவிரித்த காவல்துறை..!
ஆன்லைன் கடன்
கோவை மாவட்டம் வீரியம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு தேவைகளுக்காக ஆன்லைனில் வந்த விளம்பரம் ஒன்றைப் பார்த்துவிட்டு கடன் வாங்கி இருக்கிறார். ஒரு லட்சம் தருவதாக சொல்லப்பட்ட அந்த விளம்பரத்தை நம்பி தன்னுடைய பான்கார்டு உள்ளிட்ட முக்கிய தகவல்களை அவர் பகிர்ந்திருக்கிறார். இந்நிலையில், அவருக்கு 57,000 ரூபாய் மட்டுமே லோன் கிடைத்திருக்கிறது.
வாங்கிய கடனுக்கு வட்டியுடன் சேர்த்து மொத்தம் 74,000 ரூபாயை அந்தப் பெண் செலுத்தி உள்ளார். ஆனாலும், மீதி தொகையை வட்டியுடன் செலுத்தவேண்டும் என கடன் வழங்கியவர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதுமட்டும் அல்லாமல் தாமதமாக செலுத்தும் பணத்திற்கு வட்டி விதிக்கப்படும் எனவும் அந்த கும்பல் தெரிவிக்க, இதனால் கோவை பெண் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
மிரட்டல்
இந்நிலையில், கூடுதல் பணம் கேட்டு பெண்ணை மிரட்டிய அந்த கும்பல், பணம் கிடைக்காததால் அவரது புகைப்படங்களை வாட்ஸாப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்ததாக தெரிகிறது. மேலும், பெண்ணின் போனில் உள்ள நபர்களின் எண்களுக்கு 'கடனை திரும்பிச் செலுத்தாதவர்' என்றும் 'மோசடி பேர்வழி' என்றும் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து போனில் பெண்ணிடம் ஆபாசமாக அந்த கும்பலை சேர்ந்தவர்கள் மிரட்டியதோடு, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து, கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அந்தப் பெண் புகார் அளித்திருக்கிறார்.
விசாரணை
பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் மோசடி கும்பலை பிடிக்கும் முயற்சியில் இறங்கினர். பெண்ணிடம் இருந்த அவர்களது மொபைல் எண்கள் மூலமாக விசாரணையை துவங்கிய அதிகாரிகள் பெங்களூருவில் வசித்துவந்த அஷ்ரியா அஃப்ரின், யாசின் பாட்ஷா, ரகுமான் ஷெரிஃப் மற்றும் பர்வீன் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர்.
கைது செய்தவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய காவல்துறை அதிகாரிகள் ஆண் கைதிகளை பொள்ளாச்சி கிளை சிறையிலும், பெண் கைதிகளை கோவை மத்திய சிறையில் இருக்கும் சிறப்பு பெண்கள் சிறையிலும் அடைத்தனர். மேலும் அவர்களிடம் நடத்திய விசாரணையில் வெளிநாட்டைச் சேர்ந்த சன்னி என்பவர் நடத்தி வந்த 'ஸ்மார்ட் லோன் ஆப்' என்ற நிறுவனத்தில் இவர்கள் பணிபுரிந்தது தெரியவந்தது.
கடன் வாங்கியவர்களை போனில் தொடர்பு கொண்டு பேசி அவர்களிடமிருந்து கடன் மற்றும் அதற்குரிய வட்டியை வசூலிப்பது இவர்களது வேலையாக இருந்திருக்கிறது. இதற்காக மாதம் முப்பதாயிரம் ரூபாய் ஊதியம் பெற்றதாகவும் கைதானவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
கூடுதல் பணம் கேட்டு பெண்ணை மிரட்டிவந்த நபர்களை கோவை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை அதிகாரிகள் கைது செய்திருப்பது தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- "கோவை மக்கள் குசும்பு புடிச்சவங்க".. "பேசுனத வாபஸ் வாங்கிக்கிறேன்.." மேடையில் உதயநிதி கலகலப்பு..!
- ஐபோன் மோகம்.. தப்பான ரூட்டில் போன முன்னாள் மிஸ்டர் இந்தியா.. பரபரப்பு சிசிடிவி காட்சிகள்..
- "முடிஞ்சா நெருங்கிப் பாருங்க".. 9 மாநில போலீசுக்கு சவால் விட்ட திருடன்.. அவசரப்பட்டுட்டியே குமாரு..!
- வாக்கிங் போன மனைவிய காணோம்.. புகார் கொடுத்த கணவன்.. புதருக்குள்ள இருந்து கேட்ட செல்போன் சத்தம்..மாஸ்டர் பிளானை கண்டுபிடித்த போலீஸ்..!
- டீச்சர் அடிக்கிறாங்க என்னன்னு கேளுங்க.. போலீஸ் ஸ்டேஷனுக்கு தனியாக வந்த 3 ஆம் வகுப்பு Cute சிறுவன்..
- ஒரு நீதிபதி பேரன் செய்ற காரியமா இது?.. காட்டிக்கொடுத்த சிசிடிவி..! இப்படி ஒரு நிலைமைக்கு என்ன காரணம்.. ?
- ஒரே வருஷம் தான்.. பணம் டபுள் ஆகிடும்.. நம்பிப்போன பெண்ணிற்கு நடந்த சோகம்..!
- “நான் பெரிய ரவுடின்னு எல்லாத்துக்கும் காட்டணும்”.. திட்டமிட்டு பட்டப்பகலில் நடந்த பயங்கரம்.. கைதான நபர் கொடுத்த பகீர் வாக்குமூலம்..!
- விரட்டி சென்ற பெண் போலீஸ்.. அப்படியே காருக்குள் வைத்து கடத்த முயன்ற டிரைவர்.. புதுச்சேரியில் தமிழக இளைஞர் செய்த பகீர் சேட்டை..!
- என் பொண்ண விட்ருங்க மாப்ள.. குறுக்க பாய்ந்த மாமியார்.. அம்மா, பொண்ணு 2 பேரையும்.. கோவத்தில் நடந்த கொடூரம்..!