'இதனாலதான் ஆரம்பத்துல இருந்தே.. காப்பாத்தாம வீடியோ எடுத்தேன்!'.. கொடைக்கானல் பெண் தீக்குளித்த வழக்கில் வீடியோ எடுத்தவர் கூறிய 'வியக்க வைக்கும்' காரணம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள ஆடலூரைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி 32 வயதான மாலதிக்கு ஒரு மகன் உள்ள நிலையில், 10 வருடங்களாக கணவன் மற்றும் மகனைப் பிரி்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
தற்போது கடந்த 4 வருடமாக கே.சி.பட்டியை சேர்ந்த 26 வயதான சதீஷ் என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில், தான் நம்பி வந்த சதீஷ் வெறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டதால், மனமுடைந்த மாலதி சதீஷின் வீட்டு முன்பு நின்று உடலில் தீவைத்து தற்கொலை செய்துகொண்டார்.
முன்னதாக மாலதி தனது சேலையில் தீ வைத்துக்கொள்வதற்கு முன்னரே டீக்கடையில் டீ அருந்தியபடி இருந்த ஒருவர் அப்படியே அவ்விடத்தை விட்டு நகர்கிறார்.
இதனை அடுத்து தனக்குத் தானே தீவைத்துக்கொண்டதுடன், தீ மளமளவென பற்றி எரிந்தது தொடங்கி, பிறகு “காப்பாத்துங்க” என்று தீக்காயங்களுடன் அலறியபடி மாலதி இறக்கும் தருணம் வரையிலான அந்த 2 நிமிடங்களும், அப்பெண்ணை காப்பாற்ற முயற்சிக்காமல் அருகிலிருந்த, ஒருவர் வீடியோ மட்டும் எடுத்து, வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த, தாண்டிக்குடி போலீஸார் முன்னதாக தற்கொலைக்கு தூண்டியதாக சதீஷ் என்பவரை கைது செய்ததுடன், அப்பெண்ணை காப்பாற்ற முயலாமல் மனிதாபிமானமின்றி வீடியோ எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டவர் குறித்து விசாரித்தனர். ஆனால் வீடியோ எடுத்தவர் சதீஷின் சகோதரர் சரவணக்குமார் என்பதை அறிந்ததை அடுத்து அவரையும் கைது செய்துள்ளனர்.
இதுபற்றி காரணம் கூறிய சரவணக்குமார், மாலதி தானாகவே முன்வந்து தற்கொலை முயற்சித்தார் என்பதற்கு சாட்சியாக இந்த வீடியோவை பதிவு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். எனினும் மாலதியை காப்பாற்ற முன்வராமல் வீடியோ எடுத்ததால் தற்கொலைக்கு தூண்டிய சதீஷ்க்கு சரவணகுமார் உடந்தையாக இருந்ததாக அவரையும் போலீஸார் கைது செய்தனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- மார்க் & ஸ்பென்ஸரில் 'நைட் ஷிஃப்ட் வேலை'.. '1 மணிக்கெல்லாம் வீட்டில் இருந்து கிளம்பும்'.. 'கோடீஸ்வர பெண்ணின்' ஆச்சர்யமூட்டும் 'செயல்'!
- 'அந்த பொண்ணும் மனுஷி தான்'... 'நீ பண்ற வேலைக்கு பெத்தவங்க நாங்க சப்போர்ட் வேற பண்ணனுமா'... இளம் என்ஜினீயர் செஞ்ச கோரம்!
- ‘நல்லா நியாபகம் இருக்கு!.. இவர எங்கயோ பாத்துருக்கேன்’.. கொரோனா நேரத்திலும் 'இந்த மாதிரி ஆளுகளுக்கு' அடித்த ஜாக்பாட்!
- 'சுத்தியலால் மனைவியின் தலையில்'.. 'ஓங்கி அடித்துக் கொன்ற கணவர்!'... 'கூலாக' சொன்ன 'வியப்பில் ஆழ்த்தும்' காரணம்!
- 'இது எப்படி பாசிபிள்?'... 'கொரோனாவிலிருந்து குணமடைந்த பெண்ணுக்கு'... 'டெஸ்ட் ரிப்போர்ட்டில் காத்திருந்த பெரிய ஷாக்!'...
- 'பயங்கர' சத்தத்துடன் 'அலறித்துடித்த' பழங்குடி 'பெண்'!.. விறகு எடுக்க போன இடத்தில் 'கணவர்' கண்முன்னே 'மனைவிக்கு' நடந்த 'கோரம்'!
- 'புனித கங்கை நதிக்கரை பாலத்துல நின்னு'.. 'நிர்வாண வீடியோ?'.. 'அதிரவைத்த பிரஞ்சு பெண்'... 'கடைசியில் சொன்ன காரணம்'!
- '38 வயது பெண்ணுடன் ஓடி வந்த இளைஞர்'... 'கொஞ்ச நேரத்துல திபு திபுவென போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த 5 ஆண்கள்'... யாருன்னு தெரிஞ்சதும் ஆடி போன போலீசார்!
- “ராத்திரி ஆனா சுடுகாட்டுக்கு போய்”.. இந்தியாவில் மந்திர, தந்திர, சூனியம் கற்றுக்கொண்டிருந்த அமெரிக்க பெண்ணுக்கு நேர்ந்த கதி!
- லண்டனில் தண்ணீரில் மூழ்கடித்து மகனைக் கொன்ற பெண் யார்? எந்த நாட்டைச் சேர்ந்தவர்? பிரேத பரிசோதனையில் இருந்த ‘புதிய’ உண்மை என்ன?