‘வேறொரு’ வழக்கை விசாரிக்கும்போது... தானாக ‘உளறி’ மாட்டிக் கொண்ட கொலையாளி... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்’...

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கொடைக்கானலில் ஒரு வழக்கு விசாரணையின்போது வேறொரு கொலை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் சிக்கியுள்ளனர்.

கொடைக்கானல் அருகே கார் எரிப்பு தொடர்பான வழக்கு விசாரணையின்போது 4 மாதங்களுக்கு முன் நடந்த கொலை சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் வெள்ளைப்பாறை பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவருடைய கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. அதுதொடர்பாக போலீசார் மணிகண்டன் என்பவரிடம் விசாரித்தபோது, அவர் தான் 4 மாதங்களுக்கு முன் செய்த ஒரு கொலைக்காக தன்னைப் பிடித்துள்ளதாக நினைத்து உளறியுள்ளார். அவர் கூறியதைக் கேட்டு அதிர்ந்துபோன போலீசார் மேலும் விசாரித்ததில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேனியைச் சேர்ந்த திருப்பதி (48) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக கொடைக்கானலில் தங்கி விவசாய கூலித் தொழில் செய்துவந்துள்ளார்.  அப்போது அவருக்கு கூம்பூர் வயல் பகுதியைச் சேர்ந்த தாஸ் என்பவருடைய மனைவி ஜான்சி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளையில் ஜான்சியுடைய தங்கையான சாந்தி என்பவருக்கு ஏற்கெனவே திருமணமான மணிகண்டன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பழக்கத்தை திருப்பதி கண்டித்ததால் அவருக்கும், மணிகண்டனுக்கும் இடையே பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக கடந்த ஆகஸ்ட் 14ஆம் தேதி திருப்பதியைக் கொலை செய்த மணிகண்டன் அவருடைய உடலை குருசடி என்ற இடத்திலிருந்து 700 அடி பள்ளத்தில் வீசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்தக் கொலையில் தொடர்புடைய நாகராஜ், சரத்குமார், விஷ்ணு, ஜான்சி மற்றும் சாந்தி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் மணிகண்டன் கூறிய ஓடைப் பகுதியில் தேடியபோது திருப்பதியின் உடல் கிடைக்காததால், சமீபத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் அல்லது வன விலங்குகளால் சிதைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

CRIME, MURDER, KODAIKANAL, SISTERS, LOVER, AFFAIR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்