'காற்றில் வேகமாக பறந்து வந்த மாஞ்சா நூல்...' 'பைக்ல ஸ்பீடா போய்கிட்டு இருந்தப்போ டக்குன்னு...' 'கண் இமைக்கும் நேரத்தில்...' சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அண்ணா சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் இளைஞர் மாஞ்சா நூல் கழுத்தில் அறுத்து படுகாயம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பழைய வண்ணாரப்பேட்டையில் வசித்து வரும் புவனேஷ் என்ற இளைஞர் தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகிறார். வேலை நேரம் முடிந்து தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார் புவனேஷ்.
அண்ணாசாலையில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த புவனேஷின் கழுத்தில் கண் இமைக்கும் நேரத்தில் மாஞ்சா நூல் சிக்கியுள்ளது. காற்றின் வேகத்தால் மாஞ்சா நூல் கழுத்து பகுதியில் சுற்றி கீழே விழுந்துள்ளார். விழுந்த வேகத்தில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்த பொதுமக்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது புவனேஷுக்கு கழுத்தில் 14 தையல்கள் போடப்பட்டுள்ளன. இதற்கு முன்பு இதேபோல் மாஞ்சா நூலால் பல பேர் உயிரிழந்ததை அடுத்து, மாஞ்சா நூல் விடுவதை சென்னை உயர்நீதிமன்றம் பல ஆண்டுகளுக்கு முன்பே தடை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து, தடையை மீறி மாஞ்சா நூல் பறக்கவிட்டவர்களை தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்