'மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி பற்றி பேசிய பேச்சு'... 'கிஷோர் கே சாமி' அதிரடி கைது!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்டதாக கிஷோர் கே சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

'மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி பற்றி பேசிய பேச்சு'... 'கிஷோர் கே சாமி' அதிரடி கைது!

சமூக வலைத்தளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருபவர் கிஷோர் கே சாமி. இவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் இழிவாகவும் பதிவிட்டு வந்துள்ளார்.

Kishore K. Swamy arrested for circulating defamatory content

இவரின் கருத்துக்களுக்கு நெட்டிசன்கள் பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வந்தார்கள். இவர் தொடர்ந்து இதுபோல பேசி வருவதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் பரவலாகச் சமூகவலைத்தளங்களில் எழுந்து வந்தது. இந்நிலையில் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐ.டி விங்க் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே சாமி சென்னையில் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இவரின் கைதுக்கு நெட்டிசன்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

மற்ற செய்திகள்