'கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மாணவி பிரதிபாவுக்கு இருந்த பிரச்சனை!'.. 'பிரேத' பரிசோதனையில் பரபரப்பு 'திருப்பம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாக விடுதி அறையில் மர்மமாக இறந்து கிடந்த மருத்துவ மாணவி பிரதிபாவின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

கொரோனாவினால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டபோதும, பெரம்பூரில் இருந்து பிரதிபா கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை வளாக விடுதியில் தங்கி அங்கு பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்தபோது நடந்த இந்த சம்பவத்தை அடுத்து பலரும், பிரதிபா பெற்றோர்களிடமும் தோழிகளிடமும் நல்ல முறையில் பேசிவிட்டுதான் இரவு படுக்கச் சென்றதாகவும், ஆனால் அடுத்த நாள் டியூட்டிக்கு கிளம்பாத பிரதிபாவின் அறை திறக்கப்படாமல் இருந்ததை அடுத்து அவரது அறைக்கதவை திறந்தபோது அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனை அடுத்து இறுதி ஆண்டு மருத்துவம் பயின்று வந்த மருத்துவமாணவியும்  சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியின் வளாகத்தில் பயிற்சி மருத்துவராகவும் பணிபுரிந்து வந்த பிரதிபா, கடந்த மே 1-ஆம் தேதி பூட்டிய அறைக்குள் சடலமாகக் கிடந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. அதன் பின்னர் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில் எந்த துப்பும் கிடைக்கவில்லை. இதனிடையே பிரதிபாவுக்கு கொரோனா தொற்று இல்லை என்றும் அப்போது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாணவி பிரதிபாவின் மருத்துவ பிரேத பரிசோதனை ரிப்போர்ட் தற்போது வெளியாகியுள்ளது. அதில், “பிரதிபாவுக்கு இதய ரத்தக் குழாயில் அடைப்பு எற்பட்டிருந்தது” தெரியவந்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்