'கவுன்சிலர்' பதவிக்கு ஜெயிச்சது குத்தமாய்யா...? மனைவி, மகன், மாமியார் குடும்பத்துடன் கடத்தல்...! நீதிமன்றத்தில் கதறிய கணவன்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற பூங்கொடி என்பவர் அவரது 4 மாத குழந்தை மற்றும் மாமியாருடன் கடத்தப்பட்டதாக அவரது கணவர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார்.
திருத்தணி அருகே உள்ள மத்தூர் கிராமத்தை சேர்ந்த கோட்டி என்பவர் திருப்பூரில் ஆடை ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மனைவி பூங்கொடி. இவர்களது நான்கு மாத குழந்தையின் பெயர் நிஷாந்த்.
உள்ளாட்சி தேர்தலில் திருத்தணி ஒன்றியம் 2-வது வார்டில் பூங்கொடி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கவுன்சிலர் பூங்கொடி அவரது மகன் நிஷாந்த், தாய் வசந்தி ஆகியோர் கடத்தப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து பூங்கொடியின் கணவர் கோட்டி கடந்த 10-ந் தேதி திருவள்ளூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். ஆனால், மாயமான பூங்கொடி உள்பட 3 பேரும் இன்னும் மீட்கப்படவில்லை.
இதையடுத்து கோட்டி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடத்தப்பட்ட மனைவி பூங்கொடி, மகன் நிஷாந்த், மாமியார் வசந்தி ஆகியோரை மீட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். திருத்தணி பைபாஸ் சாலையில் வசிக்கும் ஜோதி நாயுடு என்பவர்தான் கடத்தலில் ஈடுபட்டதாக மனுவில் தெரிவித்துள்ளார். கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து மனைவி, குழந்தை மற்றும் மாமியாரை மீட்டு தர வேண்டும் என மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- அங்க அடயாளங்கள் - 'ஒரு தும்பிக்கை, 4 கால், ஒரு வால்'... "யானையை கண்டுபுடிச்சுத் தாங்க ஐயா"... விக்கித்து போன 'நீதிபதி'...
- என்னை 'பாலியல்' வன்புணர்வு 'செய்துவிட்டார்' மனைவி புகார்... தண்டனையை 'ரத்து' செய்த ஐகோர்ட்..!
- ‘நடிகர் சிவாஜி கணேசன் குறித்து சர்ச்சைப் பேச்சு’.. ‘முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வலுக்கும் கண்டனம்’..
- ‘இந்த ஊர்காரங்க மட்டும்’... ‘அதிகாலை 2 மணிவரை’... ‘தீபாவளி பர்சேஸ் பண்ணலாம்’!
- 'சோஷியல் மீடியா அக்கெவுண்ட்டுடன்’... ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமா?'... விவரம் உள்ளே!
- ‘திமுக - அதிமுக வெற்றி யாருக்கு?’.. ‘இன்று ராதாபுரம் தொகுதியின் மறுவாக்கு எண்ணிக்கை’.. ‘சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி’..
- '75 வயது தாயை செருப்பால் அடித்த மகன், மருமகள்'... 'நூதன தண்டனை கொடுத்த நீதிபதி'!
- ‘சுபஸ்ரீ பலியான வழக்கு’... ‘அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்’!
- ‘இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு’... ‘பேனர் வைத்த விவகாரத்தில்’... 'நடந்த திடீர் திருப்பம்’!
- ‘அரசியல் கட்சி பேனர் சரிந்ததில்’.. ‘நிலைதடுமாறி லாரியில் சிக்கிய இளம்பெண்’.. ‘சென்னையில் நடந்த பதைபதைக்க வைக்கும் சம்பவம்’..