கோவிலில் தன்னை மறந்து பாடும் சிறுவன்.. சொக்கிப்போய் நின்ன பக்தர்கள்.. மலைக்க வைக்கும் மழலையின் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோவிலில் சிறுவன் ஒருவன் தன்னை மறந்து பக்தி பாடல்களை பாடும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோவிலில் தன்னை மறந்து பாடும் சிறுவன்.. சொக்கிப்போய் நின்ன பக்தர்கள்.. மலைக்க வைக்கும் மழலையின் வீடியோ..!
Advertising
>
Advertising

Also Read | டக்குனு காரை நிறுத்தி கீழே இறங்கிய பிரதமர் மோடி.. முதியவர் கொடுத்த அன்பு பரிசு.. வைரலாகும் வீடியோ..!

இணையத்தின் வீச்சு வளர்ச்சி நம்ப முடியாத அளவிற்கு வளர்ச்சி பெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக ஊடகங்கள் மக்களிடையே பிரபலமாகி வருகின்றன. தமக்குள் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர பலரும் சமூக ஊடகங்களை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி வருகின்றனர். அவர்களுடைய படைப்பு நிமிடங்களில் உலகம் முழுவதிலும் போய் சேர சமூக ஊடகங்களே ஒரே வழியாகவும் இருக்கின்றன. அந்த வகையில் தற்போது சமூக ஊடகங்களில் சிறுவன் ஒருவன் பக்தி பாடல்களை பாடும் வீடியோ வைரலாகி வருகிறது.

Kid Sing devotional song in Temple video goes viral

சிறுவன்

கோவிலில் பக்தர்கள் கூட்டம் ஒருபக்கம் அலைமோத, ஒரு சிறுவன் கைகளை கூப்பியடி சந்நிதிக்கு முன்பாக நிற்கிறான். 'பெற்ற தாய் தனை மக மறந்தாலும்' என்ற பக்தி பாடலை தன்னை மறந்து சிறுவன் பாட, அங்கிருந்த அனைவரும் சொக்கிப்போய் நிற்கிறார்கள். நெற்றியில் விபூதி, சந்தனம் மற்றும் குங்குமத்துடன் கசிந்துருக்கும் தனது குரலில் பாடல்களை அந்த சிறுவன் பாட கோவிலே அக்குரலால் நிறைகிறது.

பாடல்

அந்த பக்கமாக செல்லும் பக்தர்கள் கூட அச்சிறுவனுக்கு வழிவிட்டு அவனை இடையூறு செய்யாமல் செல்கின்றனர். இருப்பினும் தன்னை சுற்றி நடப்பவற்றை கவனத்தில் கொள்ளாமல், இறைவனை நினைத்து பாடல்களை தெளிவாகவும், ராகத்துடனும் பாடி அனைவரையும் ஆச்சர்யப்படுத்துகிறான் அந்த சிறுவன். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகிய நிலையில் பலரும் சிறுவனின் குரல் வளத்தையும் பக்தி ஈடுபாட்டையும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இந்த சிறுவனின் பெயர் சூரிய நாராயணன் என்றும், பவானி கூடுதுறை சங்கமேஸ்வரர் திருக்கோவிலில் இப்பாடலை அந்த சிறுவன் பாடியபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.

 

Also Read | "2 முறை சுட்டுட்டாங்க.. ஆனாலும் அது விடல".. ரகசிய ஆப்பரேஷனில் களமிறங்கிய ராணுவத்தின் சிறப்பு நாய்.. தனியா நின்னு செஞ்ச சம்பவம்.. வீடியோ..!

KID, SING DEVOTIONAL SONG, TEMPLE, சிறுவன்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்