'ரூ.15 சோப்பு முதல் ரூ.20,000 பட்டுப்புடவை வரை!'... வந்துவிட்டது 'காதிகிராப்ட்' விற்பனை வாகனம்!... தமிழக அரசு அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாடு கதர் கிராம தொழில்நிறுவனமான காதிகிராப்ட் சார்பில் உற்பத்தியாகும் பொருட்கள் பொதுமக்களை சென்று சேரும் வகையில் நடமாடும் விற்பனை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது.

பெண் சுய உதவிக்குழுக்கள் மற்றும் கிராமத்தில் உள்ள சிறு தொழில் முனைவோர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், காதி கிராப்ட் நிறுவனத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.

எனவே, அதன் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் காதிகிராப்ட் நிறுவனத்தின் பொருட்கள் மக்களை எளிதாக சென்று சேரும் வகையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள விற்பனை வாகனத்தை காதிகிராப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முதற்கட்டமாக, சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அந்த வாகனம் மக்கள் கூடும் இடங்களில் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. சோப்பு, சுத்தமான தேன், பட்டுப் புடவை, பனை தயாரிப்பு பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன.

15 ரூபாய் மதிப்புள்ள குளிக்கும் சோப்பு முதல் 20,000 ரூபாய் மதிப்பிலான பட்டுப்புடவை வரை விற்பனையில் இடம்பெற்றுள்ளது. மேலும், காதி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் பொருட்கள் கலப்படம் இல்லாத சுத்தமான பொருட்கள் என்பதால் மக்கள் அவற்றை ஆர்வத்துடன் வாங்கிச்செல்கின்றனர்.

 

KHADIKRAFT, MOBILE, SHOPS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்