திருமண நிச்சயதார்த்தம் நடக்க ரெடியா இருந்த நேரத்தில்.. வீட்டுக்கு மேல கேட்ட பயங்கர சத்தம்.. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்
முகப்பு > செய்திகள் > தமிழகம்கூடலூர்: தமிழகத்திற்கு வந்த கேரள சுற்றுபயணிகளின் கார் கூடலூர் ஊட்டி சாலையில் இருக்கும் வீட்டுக்குள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிகமாகும் சாலை விபத்துகள்:
இந்தியாவில் சாலை விபத்துகள் மிக அதிகம். போதையினாலும், கவனக் குறைவுகளினாலும், சரியான பயிற்சி இல்லாமல் ஓட்டுவதாலும் பல விபத்துகள் நடக்கின்றன. இது ஒருபுறம் என்றால் சாலையில் வரும் கால்நடைகளும் விபத்து நடக்க காரணம். இதுபோன்ற விபத்துகளில் அதிகமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. அதுமட்டுமல்லாமல் வாகன சேதம் இருந்தாலும் அதைவிட உடல் சேதம் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது. இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் நடந்து வரும் பொதுமக்கள், அல்லது பிற வாகனங்களுக்கும் பெரிய பாதிப்பு உருவாகிறது. அப்படி ஒரு சம்பவம் தான் கூடலூர் ஊட்டி சாலையில் நடந்துள்ளது.
ஊட்டிக்கு சுற்றுலா:
கேரள மாநிலம் தலைச்சேரி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் இன்னோவா கார் ஒன்றில் ஊட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். குன்னூர் சிம்ஸ் பூங்கா, தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்த்து ரசித்து விட்டு நேற்று சொந்த ஊர் புறப்பட்டு சென்றுகொண்டிருந்தனர்.
தலைகுப்புற விழுந்த இன்னோவா கார்:
பயணம் முடித்து மீண்டும் கேரளாவிற்கு திரும்பிய நிலையில் அவர்கள் பயணித்த இன்னோவா கார் டி.ஆர்.பஜார் பகுதியில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையில் தாறுமாறாக ஓடியது. இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்தபடி ஓடியுள்ளனர். இந்நிலையில், டீ.ஆர் பஜாரில் சாலையில் இருந்த சத்தியசீலன் என்பவரது வீட்டினுள் இன்னோவா கார் புகுந்து தலைகுப்புற கவிழ்ந்தது.
திருமண நிச்சயதார்த்தம்:
இந்த சம்பவத்தில் வீட்டில் இருந்த சத்தியசீலனின் மகள் சாலினி 19 காயமடைந்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த விபத்தில் காரை ஒட்டி வந்த ஓட்டுனர் ஸ்ரீநாத்தும் லேசான காயமடைந்துள்ளார். அதோடு, இன்று சத்தியசீலனின் மகன் பிரின்சுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் எதிர்பாராத இந்த விபத்து குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நடுவட்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது எப்படி? 'தாழ்வாக பறந்தப்போ திடீர்னு..' மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை
- வீட்டுக்குள்ள 'ஒரு விஷயம்' புதைஞ்சு இருக்கு.. 'அத' எடுத்தா உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி
- ஐயா.. என் வீட்டை காணோம்யா! பழையபடி ஊரில் வந்து வாழலாம் என கிளம்பி வந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி
- அண்ணா சீக்கிரம் வாங்க! பதறியடித்து ஓடிவந்த சகோதரர், ஒரே நாளில் அனைத்தையும் இழந்து நின்ற குடும்பம்
- 'பல பேருக்கு வாழ்நாள் கனவு...' 6 வயதில் 'சொந்தமா' வீடு வாங்கிய சிறுமி...! - கொண்டாடும் உறவினர்கள்...!
- 'மாமரத்த' வெட்டாம இங்க 'வீடு' கட்ட சாத்தியமே இல்லையே...! 'அப்படியா சொல்றீங்க...' - அனைவர் 'வாயையும்' அடைக்க வைத்த நபர்...!
- ஒரே ஒரு 'ஹேர்பின்' வச்சு சொந்தமா ஒரு 'வீட்டையே' வாங்கிட்டாங்க...! - சாதித்துக் காட்டிய 'டிக்டாக்' பெண்...!
- அது தான் 'கடைசியா' எங்க கூட 'பேசுறது'ன்னு தெரியாம போச்சே...! 'டிவியில நியூஸ் பார்த்த உடனேயே...' - வேதனையில் விங் கமாண்டர் குடும்பம்...!
- எப்படி ஒவ்வொரு உடலையும் 'அடையாளம்' கண்டுபிடிச்சாங்க...? - பரபரப்பு தகவல்...!
- இதுக்கு முன்னால 'யாரெல்லாம்' ஹெலிகாப்டர் விபத்துல இறந்துருக்காங்க...? - முழு விபரம்...!