'கேரளாவில் அதிகரிக்கும் தொற்று'... 'கோவைக்கு வர கடும் கட்டுப்பாடுகள் அமல்'... அதிரடி மாற்றங்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த வாரம் முதல் கோவையில் மீண்டும் தொற்று பரவல் மெல்ல உயரத் தொடங்கியது.

கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதத்தில் உச்சத்திலிருந்த கொரோனா தொற்று அதன்பின்னர் மாவட்ட நிர்வாகம் எடுத்த பல்வேறு தீவிர தடுப்பு நடவடிக்கை காரணமாகக் குறைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த வாரம் முதல் கோவையில் மீண்டும் தொற்று பரவல் மெல்ல உயரத் தொடங்கியது. 140-க்கும் கீழே சென்ற பாதிப்பு திடீரென 160, 170 என உயர்ந்து 240-யை தொட்டது.

திடீரென தொற்று பாதிப்பு உயரத் தொடங்கியதை அடுத்து மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முதல் கோவையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி இன்று முதல் கோவையில் பால், மருந்தகங்கள், தனியாகச் செயல்படும் காய்கறி கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கோவையில் திடீரென தொற்று அதிகரித்ததாலும், அண்டை மாநிலமான கேரளாவில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாலும் இன்று முதல் கேரளா, கர்நாடகா உள்பட வெளி மாநிலங்களிலிருந்து வருபவர்கள் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும். அல்லது 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே கோவைக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

மேலும் அந்த வழியாகக் கோவைக்குள் வந்த வாகனங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி தீவிர சோதனைக்கு உட்படுத்தினர். வாகனங்களில் வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று, இ-பதிவு செய்துள்ளனரா? என ஆய்வு செய்தனர். இ-பதிவு பெறாதவர்களுக்காக அங்கேயே தனி அலுவலகம் அமைத்துள்ளனர். அங்கு வைத்து அவர்களுக்கு இ-பதிவு செய்யப்படுகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்