‘ஊரடங்கால் மது கிடைக்கல’.. ‘திடீர்னு குடிக்குறத விட்டதும் அவரோட பிஹேவியர் வைலண்ட்டா மாறிடுச்சு!’.. பதறவைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கேரளாவின் திரிச்சூரில் உள்ள தாவணூர் அருகே உள்ளது குன்னம்குளம் பகுதியில் பெயிண்டிங் வேலை பார்த்து வந்தவர் 38 வயதான சனூஜ் என்பவர்.

சனூஜ் ஒரு தீவிர மதுப்பிரியராக இருந்து வந்துள்ளார். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் இருப்பதால், நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் முக்கிய நடவடிக்கையாக, பேருந்து சேவைகளும், டாஸ்மாக் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன.

இதனால் மது கிடைக்காமல் சனூஜ் தடுமாறியுள்ளார். மதுவுக்கு அடிமையான சனூஜால் குடிக்காமல் இருக்க முடியவில்லை என்பதால் அவரது செய்கைகள் திடீரென வன்முறை கலந்து, வித்தியாசமாக மாறியதாக அவரது சகோதரர் மற்றும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சனூஜ் மது கிடைக்காமல் மனம் விரக்தி அடைந்தும், பதற்றமடைந்தும், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இதுபற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறை, இதுகுறித்து விசாரித்து வருவதோடு, இப்படி திடீரென குடியை விட்டதால், விபரீத மனநிலைக்கு ஆளாகுபவர்களுக்கென விமுக்தி எனும் பெயரில் மறுவாழ்வு மையம் ஒன்றை அமைத்து, அவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளது.

KERALA, CORONALOCKDOWN, INDIAFIGHTCORONA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்