மொட்டை தலை, போலி பாஸ்போர்ட்.. ‘இவர் தான் அவர்’.. திருச்சி ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்.. விரைந்து வந்த கேரள போலீஸ்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கேரளாவில் பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் மோசடி செய்த நபரை திருச்சி விமான நிலையத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.
UPI மூலம் பணம் செலுத்துபவரா.. இதையும் கொஞ்சம் தெரிஞ்சுகோங்க.. இல்லைனா பணம் காலி!
திருச்சி
சிங்கப்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு விமானம் ஒன்று வந்துள்ளது. இதனை அடுத்து விமான பயணிகளின் ஆவணங்களையும், உடமைகளையும் விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது தேடப்பட்டு வரும் குற்றவாளி என ‘லுக் அவுட்’ நோட்டீஸ் கொடுக்கப்பட்ட ஒருவரை பிடித்த அதிகாரிகள் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மோசடி மன்னன்
இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், இவர் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் அருகே காமராஜர் நகரைச் சேர்ந்த தேவராஜன் (வயது 48) என்பதும், கேரளாவில் பல பேரை ஏமாற்றி, பல கோடி ரூபாய் மோசடி செய்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
லுக் அவுட் நோட்டீஸ்
கடந்த 2020-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் தேவராஜன் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்த நிலையில், அவர் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து, அவர் தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, தேவராஜன் குறித்த விபரங்கள் அனைத்து விமான நிலையங்களுக்கும் பகிரப்பட்டது.
போலி பாஸ்போர்ட்
இந்த நிலையில், சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த தேவராஜன், போலியாக பாஸ்போர்ட் தயார் செய்து, மொட்டையடித்து தனது அடையாளத்தையும் மாற்றிக் கொண்டுள்ளார். இதுகுறித்து, கேரள மாநிலம் கொச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு, விமான நிலைய போலீசார் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கொச்சி போலீசார், தேவராஜனை கைது செய்து கேரளாவுக்கு அழைத்துச் சென்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெத்த மனசு பித்து, பிள்ளை மனசு கல்லு.. பணம் கேட்டு தொந்தரவு செய்த மகன்.. தாயின் செயலால் நெகிழ்ந்த போலீஸ்
- ஆசைக்கு ஒரு குழந்தை இல்லையே.. ஏக்கத்தில் வாட்டிய தனிமை.. விபரீத முடிவெடுத்த தம்பதி!
- "ஓடிப்போய் திருமணம்.. இப்ப 1 வயது குழந்தை".. போக்சோவில் கணவரை கைது செய்யணுமா? நீதிமன்றம் பரபரப்பு பதில்!
- டேட்டிங் ஆப்பில் உருகி உருகி காதல்.. நேரில் சென்றால் அது பொண்ணே இல்ல.. இளைஞரின் விபரீத ஆசை
- 'நீட்' அனிதாவின் அண்ணன் பரபரப்பு கைது.. பெண்ணிடம் தகராறா? பின்னணி 'காரணம்' என்ன?
- விபரீதத்தில் முடிந்த இரண்டாம் கல்யாணம்.. கணவனிடம் போலீசார் விசாரணை!
- கள்ளக்காதல் உறவு வைத்து இருந்ததற்காக பணி நீக்கம் செய்ய முடியாது.. குஜராத் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
- ‘என்ன அம்மா வீடு திறந்து கிடக்கு’.. உள்ளே சென்று பார்த்த மகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த ஷாக்..!
- ‘அவங்க எங்க அம்மா தான்’.. 4 வருச தவிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்த போன் கால்.. ஆனந்த கண்ணீரில் குடும்பம்..!
- 'வடை போடவேண்டிய சட்டியுடன் அங்க ஏ போனீங்க தம்பி .. வாங்க ஜெயிலுக்குப் போகலாம்'.. தூக்கிய போலீஸ்