"நடிகையர் திலகம் பட வாய்ப்பு கிடைக்க காரணமாக இருந்த க்ளோஸ் அப் ஷாட்".. கீர்த்தி சுரேஷின் பெற்றோர் Exclusive..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகை கீர்த்தி சுரேஷின் பெற்றோர் சுரேஷ் மற்றும் மேனகா ஆகியோர் நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் அளித்திருக்கின்றனர். இதில் கீர்த்தி சுரேஷின் சினிமா வாழ்க்கை குறித்து பல்வேறு தகவல்களை இருவரும் பகிர்ந்துள்ளனர்.

Advertising
>
Advertising

                       Images are subject to © copyright to their respective owners.

கீர்த்தி சுரேஷ்

தற்போதைய நிலையில் தென்னிந்தியாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக அறியப்படுபவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய தந்தை சுரேஷ் தயாரிப்பாளர் ஆவார். தாய் மேனகா பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். 2000 ஆம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான கீதாஞ்சலி திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இது அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. மோகன்லால் நடித்திருந்த இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அசத்தியிருந்தார் கீர்த்தி.

Images are subject to © copyright to their respective owners.

தேசிய விருது

இதனை தொடர்ந்து தமிழில் இது என்ன மாயம், சீமராஜா, பைரவா, தொடரி, சண்டக்கோழி, தானா சேர்ந்த கூட்டம், சாமி இரண்டாம் பாகம் என முன்னணி நடிகர்களுடன் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார். இதனிடையே மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகும் மாமன்னன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இதேபோல் நடிகர் நானியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ் நடிக்கும் தசரா எனும் பான் இந்திய பிரம்மாண்டத் திரைப்படமும் வரும் 30.3.2023 அன்று வெளியாகவுள்ளது.

இதனிடையே கடந்த 2018 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான மகாநதி திரைப்படம் தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவந்தது. இதில் பழம்பெரும் நடிகை சாவித்ரியாக திரையில் தோன்றி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க செய்திருந்தார் கீர்த்தி சுரேஷ். இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் வழங்கப்பட்டது.

சிங்கிள் ஷாட்

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் பெற்றோரான சுரேஷ் - மேனகா தம்பதி நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணலை அளித்திருக்கின்றனர். அப்போது மஹாநதி பட வாய்ப்பு கிடைத்த விதம் பற்றி பேசிய மேனகா,"குழந்தை நட்சத்திரமாக அவள் நடித்தபோதே அதில் இருக்கும் ஆர்வம் எனக்கு புரிந்துவிட்டது. ஒவ்வொரு படத்திலும் கவனம் எடுத்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தாள். மஹாநதி திரைப்படம் பெருமளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது. தொடரி படத்தில் இடம்பெற்ற 'போன உசுரு வந்துடுச்சு' பாடலில் அவளது ஒரு க்ளோஸ் அப் காட்சியை கண்ட பிறகு தான் நாக் அஷ்வின் (மஹாநதி இயக்குநர்) அந்த வாய்ப்பை கொடுத்தாரு. அதுல அவளுக்கு தேசிய விருதும் கிடைச்சது. சாதனைகளையும் சறுக்கல்களையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் அவளுக்கு இருக்கிறது" என்றார்.

 

KEERTHY SURESH, MENAGA, MAHANATI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்