"உலகம் பூராவும் தல -னா அது அஜித் சார் மட்டும் தான்".. பத்து தல தலைப்பு குறித்து ஞானவேல்ராஜா EXCLUSIVE!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பத்து தல படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா படம் குறித்து பேசியுள்ளார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | விஜய் நடிக்கும் 'LEO'.. அடுத்த லுக் போஸ்டர் ரெடி போல.. காஷ்மீரில் பிரபல இயக்குனர் கொடுத்த HINT!

மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு அடுத்ததாக கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக 'பத்து தல' படம் உருவாகிறது.

இந்த திரைப்படத்தில், சிம்புவுடன் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன், இயக்குனர் கௌதம் மேனன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

Images are subject to © copyright to their respective owners.

ஸ்டுடியோ கிரீன், K. E. ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் எடிட்டராக தேசிய விருது பெற்ற எடிட்டர் பிரவீன் K L பணிபுரிகிறார்.

பத்து தல படத்தின்   படப்பிடிப்பு ஆந்திராவில் உள்ள ஐத்ராபாத், விசாகப்பட்டினம், , கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி, துங்கபத்திரை அணை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, கோவிலூர்,கன்னியாகுமரி ஆகிய ஊர்களில் நடந்து நிறைவடைந்தது.

Images are subject to © copyright to their respective owners.

தற்போது இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் பத்து தல படத்தின் டீஸர், பாடல்கள் & டிரெய்லர்  வெளியானது.  நேற்று முன்தினம் பத்து தல படத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், இயக்குனர் கிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா  அளித்துள்ளார். அதில் படத்தின் தலைப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், "உலகம் முழுவதும் தல என்றால் அது அஜித் சார் மட்டும் தான். வேற யாரும் கிடையாது. இந்த தலைப்பு வேண்டுமா என்று இயக்குனரிடம் கேட்டேன். இந்த படத்தின் முதல் தலைப்பு நான் யோசித்தது ராவணன் என்று தான். அதே சமயம் அசுரன், கர்ணன் போல வேண்டும் என்று வைத்தது போல ஆகிடும். அதனால் ராவணன் என்று அர்த்தம் வரும் பத்து தல தலைப்பு வைக்கப்பட்டது." என ஞானவேல்ராஜா கூறினார்.

Also Read | விடுதலை - 1 படத்தின் ரிலீஸ் எப்போ? புது போஸ்டருடன் வெளியான தெறி அப்டேட்!

KE GNANAVEL RAJA, AJITHKUMAR, SILAMBARASAN TR, PATHU THALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்